தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கையால் குடும்பத்திற்கு மாதம் ரூ.2,000 கூடுதல் சுமை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் சாடல்

20 Jun 2026, 12:01 am
மோடி அரசின் மக்கள் விரோத கொள்கையால் குடும்பத்திற்கு மாதம் ரூ.2,000 கூடுதல் சுமை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் சாடல்
<p><strong>மோடி அரசின் மக்கள் விரோத கொள்கையால் குடும்பத்திற்கு மாதம் ரூ.2,000 கூடுதல் சுமை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் சாடல்</strong></p><p>சென்னை, ஜூன் 19 பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைப்பது உள்ளிட்ட மத்திய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் பெரம்பூர், ஆர்.கே.நகர், அம்பத்தூர் ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பெரம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில், &quot;அண்மை யில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் 4ஆவது போராட்டம் இது&quot; என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், &quot;கடந்த ஏப்ரல் 23ஆம் தேதிக்குப் பிறகு, மத்திய அரசு 5 முறை பெட்ரோல், டீசல் விலையையும், தலா இரண்டு முறை வீட்டு உபயோக மற்றும் வணிக சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தியுள்ளது. இதனால் ஒரு தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் சராசரியாக 2,000 ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் சம்பளம் உயரவில்லை&quot; என்று சாடினார். மேலும், சென்னையில் பெட்ரோல் விலை 108 ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், அதில் 48 ரூபாய் வரியாக மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்றும், மோடி ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களின் சொத்து மதிப்பு மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார். தொழிலாளர் சட்டங்களுக்கு வேட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் குறித்துப் பேசிய எஸ்.கண்ணன், &quot;தொழிலாளர்கள் சங்கம் அமைக்கவும், போராடவும், கோரிக்கை வைக்கவும் உள்ள ஜனநாயக உரிமைகளைப் பறித்து, அனைவரையும் ஒப்பந்தத் தொழி லாளர்களாக மாற்றும் நோக்கில் இந்த சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. தில்லியைச் சுற்றி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு மாதங்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்குப் பிறகுதான், அங்கு சம்பள உயர்வு சாத்தியமானது. எனவே நாம் போராடினால் மட்டுமே உரிமை களைப் பெற முடியும்&quot; என்றார். 100 நாள் வேலை திட்டத்தில் ஏமாற்று வேலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் இடதுசாரிகளின் அழுத்தத்தால் கொண்டு வரப்பட்ட &#39;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்&#39;, தற்போது மோடி அரசால் &#39;விபி ஜி ராம் ஜி&#39; திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சீர்குலைக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். தமிழக அரசுக்கு கோரிக்கை &quot;தமிழக அரசு இந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் தமிழ்நாட்டில் ஒருபோதும் அமலாக்க மாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும், பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசு விதிக்கும் வரியில் 5 சதவீதத்தைக் குறைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும். மத்திய அரசின் தாக்குதலைத் தடுக்க மாநில அரசு ஒரு கேடயமாகச் செயல்பட வேண்டும்&quot; என்று வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், அ.விஜயகுமார், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.ஆனந்தன், எம்.கோடீஸ்வரி, டி.பாபு, எம்.ராஜ்குமார், வி.செல்வராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.