தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த மோடி அரசு திட்டமா?

24 May 2026, 8:36 pm
உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த மோடி அரசு திட்டமா?

உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த மோடி அரசு திட்டமா?

புதுதில்லி மே 22 அன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அனை வரும் பங்கேற்றனர்.

மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பாக உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து பிரதமர் மோடி விவாதித்ததாக கூறப் படுகிறது.

வழக்கமாக ஒன்றிய அமைச்ச ரவை கூட்டம் என்றால் பக்கோடா, சாண்ட்விட்ச், தேநீர், காபி, பிஸ்கட் என பல சிற்றுண்டிகளை மோடி சாப்பிட தருவர் என்றும், ஆனால் இந்த கூட்டத்தில் தேநீரைத் தவிர எதுவுமே தரவில்லை என்று கூறப் படுகிறது.

மேற்கு ஆசிய நெருக் கடி காரணமாக சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என பிர தமர் கேட்டுக் கொண்டதால், இந்த ஏற்பாடு என ஒன்றிய அமைச்ச ரவை வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

பதற்றம் ஆனால் இந்நிகழ்வு நாட்டு மக்களுக்கு பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.

காரணம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த உடன் பெட்ரோல், டீசல், எரி வாயு விலையை பிரதமர் மோடி உயர்த்துவார் என எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டின.

எதிர்க்கட்சி களிடம் இருந்து தப்பிக்க அத்தியா வசியப் பொருட்களின் உயர்த்த சிக்கனம் என்ற நாடகத்தை ஆரம் பித்தார்.

பெட்ரோல், டீசல் சிக்க னம் என்ற பெயரில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைத்தார்.

பெட்ரோல், டீசல் விலை குறுகிய காலத்தில் 3 முறை உயர்ந்தது.

நாட்டு மக் களை தங்கம் வாங்க வேண்டாம் என்றார், தங்கம் விலை விண் ணைத் தாண்டியது.

வெளிநாடு செல்ல வேண்டாம் என்றார், எரி வாயு விலை தாறுமாறாக உயந் தது.

தற்போது ஒன்றிய அமைச்ச ரவை கூட்டத்தில் பக்கோடா, சாண்ட்விட்ச், பிஸ்கட்டில் சிக்கனம் பார்க்கிறார் மோடி.

இதன் பொருட்களின் விலையை யும் பிரதமர் மோடி உயர்த்த திட்ட மிட்ள்ளரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.