தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசின் ஒடுக்குமுறைக்குக் கண்டனம் தீப்பந்தமேந்தி ஆவேச ஆர்ப்பாட்டம்!

10 Oct 2026, 10:31 pm
மோடி அரசின் ஒடுக்குமுறைக்குக் கண்டனம் தீப்பந்தமேந்தி ஆவேச ஆர்ப்பாட்டம்!

மோடி அரசின் ஒடுக்குமுறைக்குக் கண்டனம் தீப்பந்தமேந்தி ஆவேச ஆர்ப்பாட்டம்!

சென்னை, அக்.10-வாக்குகளைத் திருடிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி தில்லியில் போராடுபவர்கள் மீது பாஜக - ஆர்எஸ்எஸ் காவல்துறை மற்றும் துணை ராணுவம் வேறு மாவட்டங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்.சுந்தரராசன், இரா.சிந் தன், சுதிர் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் மு. வீரபாண்டியன் பேசுகையில், “போராடுபவர்கள் மீது துணை ராணுவம் மூலம் தாக்குதல் நடத்துவது சட் டத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இதற்குப் பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண் டும். ஜனநாயகமும் சமத்துவமும் இருக்கும் ஒரே இடமான வாக்குரிமையின் கழுத்தை ஒன்றிய பாஜக அரசு அறுக் கிறது. இது ஜனநாயகப் படுகொலை; இது தேசம் காக் கும் போர்! நம் முன்னோர் கள் அளித்த நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்து, அதன் ஆகச்சிறந்த விழுமியங்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் மகத் தான போரில் இடதுசாரிகளாகிய நாங்கள் ஈடுபட்டுள் ளோம். இந்தப் போராட் டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

மதுரையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அருகில் தீப் பந்தம் ஏந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங் கம், சு. வெங்கடேசன் எம்.பி., சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.கே. சாமி, சிபிஐ (எம்.எல்.) நிர்வாகி சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மதுரை மாநகராட்சி (பொ) மேயர் தி. நாகராஜன், பகுதிக்குழு செயலாளர் ஏ. பாண்டி உட்பட 200-க்கும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கள் ஆர். சச்சிதானந்தம் எம்.பி., ஜி. ராணி, மாநகர செயலாளர் ஏ. அரபு முகமது, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.பி. மணிகண்டன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாவட்ட நிலைக்குழு உறுப் பினர் வழக்கறிஞர் ரவிக் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மூத்த தலைவர் வி. குமரவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆஸாத், அஜய் கோஷ், கே.ஆர். பாலாஜி, மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிபாசு, மாரியம்மாள், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.பி.ஜெயசீலன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.