எதிர்க்கட்சிகளை உடைத்தும் பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் மோடி அரசு
5 Jul 2026, 8:50 pm
<p><strong>எதிர்க்கட்சிகளை உடைத்தும் பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் மோடி அரசு </strong></p><p>ஜூலை 20இல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், 2029-க்குள் மகளிர் இடஒதுக்கீட்டைக் கொண்டு வரவும், மக்களவை இடங்களை 543- லிருந்து 850 ஆக உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவையும் நிறை வேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அரசியலமைப்பு சட்டத்திருத் தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை தேவை. ஆனால், ஆளும் பாஜக கூட்டணிக்கு போதிய பலமில்லை. </p><p>ஆம் ஆத்மி, திரிணாமுல், உத்தவ் சிவசேனா ஆகிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களை வளைத்துப்போட்டும் மக்க ளவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 319 ஆக மட்டுமே உயரும். ஆனால், தேவைப்படும் பெரும் பான்மை 360 ஆகும். இன்னும் 41 இடங்கள் தேவை உள்ளது. அதே போல மாநிலங்களவையில் ஆளும் கூட்டணி தரப்பில் 152 எம்.பி.,க் கள் மட்டுமே உள்ளனர். தேவைப்படும் பெரும்பான்மை 161 ஆகும். இன்னும் 9 எம்.பி.,க்கள் தேவை என்ற சூழல் உள்ளது. எனவே, எதிர்க்கட்சிகளின் ஆதர வோ அல்லது வாக்கெடு புறக்கணிப்போ இல்லாமல் இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாது.</p>
