தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

27 வயது இளைஞரைக் கண்டு மோடி அரசுக்கு பொறாமை அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

10 minutes before
27 வயது இளைஞரைக் கண்டு மோடி அரசுக்கு பொறாமை அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

27 வயது இளைஞரைக் கண்டு மோடி அரசுக்கு பொறாமை

அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

மும்பைபிரிட்டனின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான லண்டன்ஸ்கூல் ஆப்

எக்கனாமிக்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட்ட 27 வயதுஇளைஞரைக் கண்டு மோடி அரசாங்கம் பொறாமை கொண்டதால், சவுரவ்தாஸ் (இணை நிறுவனர் - சிஜேபி) விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ”பிரிட்டனிலிருந்து எனக்கும், சவுரவ்தாஸ், மற்றொரு இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்காவிற்கும் அழைப்புகள் வந்தன. அதில் சவுரவ் தாஸ் பிரிட்டன்செல்வதென முடிவு செய்யப்பட்டது. நம் நாட்டில் ஒருவர் மட்டுமே உலகச் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்று நினைக்கும் நபர் (மோடி) இருக்கிறார். அதனால் 27 வயது இளைஞர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்படுவதைக் கண்டு சற்று பொறாமைப்பட்டிருக்க லாம். அதனால் சவுரவ் தாஸ் விமானநிலை

யத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அரசியலமைப்பு 140 கோடி மக்களுக்குச்சொந்தமானது. அதிகாரத்தில் இருக்கும் ஒரு கொடுங்கோலன் மக்களின் உரிமைகளைப் பறிக்க முயலும்போதெல்லாம், எங்களைப்பாதுகாத்ததைப் போலவே அம்பேத்கரின் இந்த அரசியலமைப்புச் சட்டமே அவர்களையும் பாதுகாக்கும்” என அபிஜீத் திப்கே கூறினார்.

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம்

பிரிட்டன் செல்லவிருந்த சவுரவ் தாஸிற்கு மோடி அரசு அனுமதி மறுத்த நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில்,”மாணவர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடுவதற்காக பிரிட்டன் செல்லவிருந்த சிஜேபி இணை நிறுவனர் சவுரவ் தாஸை தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் எதேச்சதிகார நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாற்றுக் கருத்து கொண்ட இளைஞர்களின் குரல்களை நசுக்கவும், அவர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் தன்னிச்சையான பாஸ்போர்ட் தடைகளையும், கடைசி நேர நோட்டீஸ்களையும் பயன்படுத்துவது இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். இதற்குப் பின்னால் இருக்கும் அதே நபர்கள்தான் இன்று நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். பொறுப்பேற்கும்தன்மை,அரசியலமைப்பு உரிமைகளுக்காகப் போராடும் சவுரவ் தாஸ், நமது நாட்டின் மாணவர்கள், இளைஞர்களுக்கு எமது முழு ஆதரவு” என பேபி கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.