அமலாக்கத்துறை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோடி அரசு உத்தரவு
29 May 2026, 8:16 pm

அமலாக்கத்துறை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோடி அரசு உத்தரவு

புதுதில்லி ஒன்றிய பாஜக அரசு ‘பணமோசடி தடுப்பு முகமையான அமலாக்கத்துறை யை (Enforcement Directorate - ED)’ தனது கட்சியின் ஒரு பிரிவினை போல பயன்படுத்தி வருகிறது.

அதாவது எதிர்க்கட்சி ஆளும் மாநி லங்களில் ஆட்சியைக் கவிழ்க்க, எதிர்க்கட்சி களை மிரட்ட, ஒடுக்க, உடைக்க என அம லாக்கத்துறையை பாஜக ஒரு அடியாள் போன்று பயன்படுத்தி வருகிறது.

இதனால் அமலாக்கத் துறை போன்ற மத்திய முகமைகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்த பாஜக -ஆர்எஸ்எஸ் தலைமையிலான ஒன்றிய அரசு துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு அமலாக்கத்துறையின் பணியாளர் கட்ட மைப்பை மறுசீரமைக்க ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் அம லாக்கத்துறையின் ஒட்டுமொத்த பணியாளர் களின் எண்ணிக்கை 2,029-லிருந்து 3,256 ஆக, அதாவது 60 சதவீதத்திற்கும் மேலாக அதி கரிக்கப்பட வாய்ப்புள்ளது என அமைச்சக மூத்த அதிகாரிகள் தரப்பை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் வெளியாகியுள்ள தகவலில்,”அமலாக்கத்துறையின் நிர்வாகம், சட்டம், தீர்ப்பாயம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் மொத்தம் 1,227 பணியாளர்களை நிதியமைச்ச கம் அதிகரித்துள்ளது.

இந்த மனிதவள மேம்பா ட்டைத் தொடர்ந்து, உதவி அமலாக்க அதிகாரி பதவியில் 803 கூடுதல் அதிகாரிகளும், அதிகாரி பதவியில் 606 பேரும், உதவி இயக்குநர் பதவி யில் 531 பேரும் பணியாற்றும் சூழல் ஏற்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அமலாக்கத்துறையின் பணியாளர் சீரமைப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் நடைபெற்றது.

அதன்பின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமலாக்கத்துறை ஊழியர் களின் எண்ணிக்கையை மோடி அரசு அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.