மகாத்மாவை எதிர்மறையாக நினைவுகூரலாமா? எஸ்.வி. வேணுகோபாலன்
5 Oct 2026, 9:48 pm

மகாத்மாவை எதிர்மறையாக நினைவுகூரலாமா? எஸ்.வி. வேணுகோபாலன்

தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த எண்ணற்ற வழிகள் உண்டு. தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளில் மோடி அரசு அவருக்குப் புகழஞ்சலி செலுத்திய விதம் வினோதமானது. அகிம்சா மூர்த்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்த ஆண்டு நினைவு கூர்ந்த பாணி அநீதியானது.

வரலாற்றைத் துடைத்தெறிவதும், தடியடி ஜனநாயகமும்

ஆட்சிக்கு வந்ததுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணை உறுத்தியது இந்த அக்டோபர் 2 எனும் தேதி. அதனால்தான், ‘ஸ்வச் பாரத்’ என்ற பெயரில் தேசத்தைத் தூய்மைப்படுத்துவோம் என்று இந்தத் தேதியின் முக்கியத்துவத்தை மாற்ற ஒரு முயற்சி எடுத்தது. தங்களுக்கு ஒவ்வாத வரலாறுகளை, தங்களுக்குப் பிடித்தம்

இல்லாத தலைவர்களை மக்கள் மனதிலிருந்து துடைத்தெறிவதுதான் இவர்களது தூய்மைப் படுத்தும் திட்டம் என்பதை எளிய மக்கள் உணர்ந்துவிடமாட்டார்கள் என்ற துணிச்சல்!

காலப்போக்கில் குப்பைகளைப் பெருக்கித் தள்ளிப் புகைப்படம் எடுத்துத் தனது புகழைத் தானே பரப்பிச் கொண்டிருந்ததும் மோடிக்குசலித்துப் போயிருக்கக்கூடும். இந்த ஆண்டு அவர் எங்கேயும் விளக்குமாறு எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், இந்தத் தேசத்தில் போராட்டங்களே நடக்கக் கூடாது, தனக்கு எதிராக யாரும் வீதிக்கு வந்துவிடக் கூடாது, அவர்களைத் துடைத்தெறிவோம் என்ற முறையில் ஆயுதங்களோடும் (பெயர் அட்டைகளை நீக்கிக்கொண்டும்) அராஜக ஆர்ப்பாட்டத்தோடும் காவல்துறையைக் தலைநகரில் ஏவிவிட்டி ருக்கிறது அமித் ஷா - மோடி ஆட்சி.

வாக்காளர் பட்டியல் திருத்தமும், நீக்கப்படும் பெயர்களும்

தேர்தல் ஆணையத்தை அமைக்கும் கஷ்டமான பணியைத் தானே பெரும்பங்கு எடுத்துக்கொண்ட மோடிஆட்சிக்கு (நியமனம் செய்யும் குழுவில் மூன்றில் ஒருவர் பிரதமர், மற்றொருவர் அவர் சொல்லும் அமைச்சர், மூன்றாமவர் எதிர்க்கட்சித் தலைவர்), தங்களது கனவைச் செம்மையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கும் தலைமைத்தேர்தல் ஆணையரைப் பாதுகாக்க வேண்டியது தார்மீகக் கடமைதானே! சிறப்புத் தீவிரத் திருத்தம் என்பதன் உட்பொருளே தங்களுக்கு வாய்ப்பில்லாத வாக்குகள் தண்டத்திற்கு வாக்குப்பெட்டியில் விழுவானேன் என்பதுதான்; அதற்காகத்தான் ஞானேஷ் குமாரை “பட்டியலைத் தூய்மைப்படுத்தும்” பணியில் ஈடுபடுத்தியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக ஆட்சி. பல கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன என்று யாரேனும் விமர்சித்தால் அவர்களை எப்படிப் பேசவிடாமல் செய்வது?

பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் எங்கெல்லாம் மேற்கொள்ளப்பட்டி ருக்கிறதோ,அங்கெல்லாம் குய்யோ முறையோ என்று தங்களதுவாக்குரிமை பறிக்கப்பட்டுஇருப்பதை எதிர்த்து எழும் குரல்கள் ஆட்சியா ளர்கள் காதுகளில் ஒலிக்காது. தானே வாக்காளர் பட்டியலைஒழுங்குசெய்து தரும் பணியை மேற்கொண்டுள்ள பி.எல்.ஓ. (BLO) ஒருவரது பெயரே (முகமது முஜாஹர் ஹொசைன்,மேற்கு வங்கம்) அவரது பகுதி வாக்காளர் பட்டியலில் காணாமல் போயிருக்கிறது. எல்லைப்புறக் காவல் படை வீரர்சுனில் ஷாவின் பெயர் பீகார் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கிறது.குப்பை சேகரித்துப் பிழைக்கும் ரதி தாஸ் (மேற்கு வங்கம்), பீடித் தொழிலாளி ஹஸீரா பீபி (மேற்கு வங்கம்),விவசாயி ஸ்ரீ பகவான் ஷா (பீகார்), அங்கன்வாடி பணியாளர் நஜ்மதாரா காட்டூன் (மேற்கு வங்கம்), தொழிலாளிராகேஷ் சவுகான் (பீகார்) பெயர்கள் மட்டுமல்ல, 2021 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் முகமது அலாவுதீன் ஷேக்(மேற்கு வங்கம்) பெயரும் நீக்கப்பட்டு உள்ளது. இன்னொன்று கேளுங்கள்; இந்திய விமானப்படையில் விங்கமாண்டராக இருந்து சிவில் பணிக்குத் திரும்பியுள்ள மேற்கு வங்க வாக்காளர் 49 வயது முகமது ஷமீம் அக்தர்அவர்களுக்கும் இதே கதிதான்!

சக அதிகாரிகளின் எதிர்ப்பும், தலைநகரின் வன்முறையும்

தேர்தல் ஆணையத்தின் படிவங்களை முறைப்படி நிரப்பி ஆவணங்கள் எல்லாம் இணைத்துக் கொடுத்தும், வெட்டி எறியப்பட்டு உள்ளன இவர்களது பெயர்கள். பலகோடி பெயர்களுக்கும் இப்படியான விதியைத் தீர்மானித்தவர்தான் ஞானேஷ் குமார். சக தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி எடுத்துச் சொன்னமாற்றுக் கருத்துகளைச் செவிமடுக்காமல் தன்னிச்சையாகப் படிவங்களைத் திருத்தியும் பெயர்களை நீக்கியும் இவர் செய்துவந்துள்ள அராஜகத்தை எதிர்த்து அவர்கள்இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை கடிதங்கள் மூலம் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சரவை செயலாளருக்கும் தெரிவித்துள்ளனர். இந்த வண்டவாளங்கள் அனைத்தையும் ராம்நாத் கோயங்கா விருதுபெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் ரித்திகா சோப்ரா விவரமாக அம்பலப்படுத்தித் தேசத்தின்கவனத்திற்கு எடுத்துவந்துவிட்டார்.தர்மேந்திர பிரதானைப் பொத்திப்பொத்திப் பாதுகாத்து வந்ததுபோல் இப்போது ஞானேஷ் குமாரைத்தற்காத்துக்கொள்ளும் நோக்கில் உண்மைக்காகக் குரல் கொடுக்கும் போராளிகளை எதிர்கொள்ள முடியாமல்திணறும் மோடி அரசு, வழக்கம்போல் தில்லி காவல்துறையைக் கூடுதல் வேலை பார்க்க வைக்கிறது. தலைநகரில்அண்மையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் நெஞ்சைப் பிழிந்தெடுக்க, அதற்குஎதிராக ஒற்றை நகர்வு செய்யச் சிந்தனையற்ற ஆட்சியாளர்களும் காவல்துறையும் அறவழியில் போராடஎப்போதும்அப்படியானஆர்ப்பாட்டங்களுக்கான இடமான ஜந்தர் மந்தரில் சூழ்வதற்கு அனுமதிக்காமல்வன்முறையைக் கட்டவிழ்த்துத் தனது தீரச்செயலைக் காட்டி யிருக்கிறது.

காந்தியின் அறமும், ஆட்சியாளர்களின் வன்முறையும்

அறவழியில் போராடுவது கோழைத்தன மன்று; அதுதான் வீரம் என்றார் மகாத்மா. அதிகாரத்தில் இருப்போரை நோக்கி உண்மையை உரத்துப் பேசுவதுதான் ஜனநாயகம். அதற்கு அனுமதி மறுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை அன்றி வேறென்ன! தலைநகர் தில்லியில் காந்தி ஜெயந்திநாளில் வாக்குரிமையைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் தலைமை தேர்தல் ஆணையரைஉடனே பதவி நீக்கம் செய் என்று குரல்கொடுத்தல் தவறு என்றால், ஞானேஷ் குமார் செய்திருப்பதெல்லாம் சரிஎன்று ஆணவமாகப் பேசுகிறது பாஜக ஆட்சி என்றுதான் பொருள். ஜூலை 20 அன்று இவர்களின் அடக்குமுறையைநேர்படப் பார்த்த மக்கள் போராளிகள் இவர்களது அத்துமீறல்களுக்கு, வன்முறை வெறியாட்டங்களுக்குஅஞ்சமாட்டார்கள்; இந்தப் பாடத்தைக் கற்க மறுக்கும் மோடி அரசுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுக்கவேசெய்வார்கள்.தன்னை நோக்கி ஒரு கயவன் துப்பாக்கியால் சுட்டபோதும், மகாத்மா எந்தச் சுடு சொல்லும் சொல்லாமல் தனக்குப்பிரியமான பெயரை உச்சரித்துவிட்டு உயிர்நீத்தார். இன்னும் சில நொடிகள் அவரது மூச்சு நீடித்திருந்தாலும்நாதுராம் கோட்சேயை எதுவும் செய்யாதீர்கள் என்றுதான் சொல்லியிருப்பார். அது காந்தியின் அறம்.நல்லிணக்கத்தின் மீதான வலுவான நம்பிக்கையின் துணிவு அது. அன்பின் உருவகமாக அவரது புன்னகை இன்றும் ஒளிவீசவே செய்கிறது. அவரது பிறந்த நாளில் வன்முறையை ஏவியதன் மூலம்அவரை எதிர்மறையாக நினைவுகூர்ந்த ஆட்சியாளர்களை ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட மக்கள்ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். புன்னகையோடு காத்திருப்பார்கள்!