மக்களின் முதுகெலும்பை உடைக்கும் மோடி அரசு
18 May 2026, 9:24 pm

மக்களின் முதுகெலும்பை உடைக்கும் மோடி அரசு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்க ளைச் சாக்காக வைத்து, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையை ஒன்றிய மோடி அரசு அதிரடியாக உயர்த்தி யிருப்பது உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப் பட்ட நேரடிப் பொருளாதாரத் தாக்குதலாகும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்தபோது அந்த லாபத்தைத் தங்க ளுக்குள் சுருட்டிக்கொண்ட அரசு, இப்போது விலை உயர்ந்ததும் அதன் முழுச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்துவது கொடூரம்.

இதனால் பாதிக்கப்படப் போவது தினசரி உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஆட்டோ, கால்டாக்சி மற்றும் டெலிவரி ஊழியர்கள் தான். ஏற்கெனவே ஆன்லைன் நிறுவனங்களின் சுரண்டலாலும், குறைந்து வரும் வருமா னத்தாலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இவர்களுக்கு, இந்த எரிபொருள் உயர்வு மரண அடியாக மாறியுள்ளது. ஒருபுறம் சமை யல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொ ருட்களின் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. மறுபுறம், போக்குவரத்துச் செலவு அதிகரிப்ப தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு தங்களின் அன்றாட பட்ஜெட்டைப் பாதிக்கும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அதைச் சமாளிக்க, தங்க ளின் பயணங்கள் மற்றும் பொழுதுபோக்குச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு வருவதா கப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எரி பொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என அனைத்தின் மீதும் சங்கிலித் தொடர் போலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

பிரதமரின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு மட்டும் ஆடம்பரமான பெரிய பாதுகாப்புப் படைத்தொகுப்புகள் பயன் படுத்தப்படும் நிலையில், சாதாரண மக்களிடம் மட்டும் ‘தியாகம்’ செய்யக் கோருவது எந்த விதத்தில் நியாயம்? கொரோனா பேரிடர் காலத்தைப் போலவே, தற்போதைய எரிசக்தி நெருக்கடியிலும் தொலைநோக்குப் பார்வையின்றிச் செயல்பட்டுவிட்டு, இப்போது நிலைமை கையை மீறியதும் பழி முழுவதையும் சர்வதேசச் சந்தையின் மீது போடுவது ஒரு பொறுப்பான அரசுக்கு அழகல்ல.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும் முதலீடுகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்காமலும், கருப்புப் பண விவகாரங்களில் மெத்தனம் காட்டியும் வரும் மோடி அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்க எளிய மக்களைப் பலியாக்குகிறது. சிறுதொழில் களை முடக்கி, உழைப்பவர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த மக்கள் விரோத விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.