பொருளாதார அவசர நிலையை நோக்கி நாட்டை தள்ளிய மோடி அரசு அனைத்துத் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் சாடல்!
19 May 2026, 1:24 am

பொருளாதார அவசர நிலையை நோக்கி நாட்டை தள்ளிய மோடி அரசு அனைத்துத் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் சாடல்!

சென்னை, மே 18 - பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, திங்க ளன்று சென்னையில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது தொழி லாளர் முன்னேற்றச் சங்கப் பேரவைத் தலைவர் கி. நடராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக மூன்று ரூபாய் பதினொரு காசுகள் உயர்த்தி யதோடு மட்டுமில்லாமல், தற்போது மீண்டும் லிட்டருக்கு பத்து காசுகள் வரை உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு பேரல் நூற்றுப்பத்து டாலராக இருக்கும்போது, இங்கு பெட்ரோல் விலை நூற்றுப்பத்தாகவும், டீசல் விலை நூறாகவும் உயர்த்தப்பட் டுள்ளது.

முன்னதாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நாற்பது டாலராகக் குறைந்திருந்தபோது கூட,பெட்ரோல்,டீசல் விலை யைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எண்ணெய் நிறுவன ங்களின் லாபத்தை பெருக்குவதற் கும், அதானி, அம்பானி போன்ற பெருநிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுவதற்கும் மட்டுமே ஒன்றிய பாரதிய ஜனதா அரசு வழிவகுத்தது.

ஆனால், தற்போது மேற்காசியப் போரைக் காரணம் காட்டி, சர்வ தேச சந்தையில் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி மக்கள் மீது சுமையைச் சுமத்தியுள்ளது.

வருகிற ஜூன் ஒன்றாம் தேதிக்குள் பெட்ரோல், டீசல் விலை மேலும் பத்து ரூபாயும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலையும் கணிச மாக உயரும் அபாயம் உள்ளது.

இத்தகைய சூழலில், பொதுமக்கள் தனியார் வாகனங்களைப் பயன் படுத்தக் கூடாது; பொதுப் போக்கு வரத்தைப் பயன்படுத்த வேண்டும், சமையல் எண்ணை பயன்பாட் டைக் குறைக்க வேண்டும், விவசாயி கள் உரப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங் களைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் பிரதமர் மோடி அறி வுரை கூறுகிறார்.

ஆனால், இதற்கான மாற்று ஏற்பாடுகள் எதையும் அரசு செய்யவில்லை.

பொதுமக்களைப் பயணங்களைக் குறைக்கச் சொல்லும் பிரதமர் மோடி, தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறார். சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொண்ணூற்றாறு ரூபாய் ஐந்து காசுகளாக வீழ்ச்சிய டைந்துள்ளது. இதன் மூலம் பொரு ளாதாரத் துறையில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது தெளிவாகிறது.

நாடு தற்போது பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன் தொடக்கமே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும்.

இந்த விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட் களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு புள்ளி எட்டு இரண்டு சதவீதமாக இருந்த சில்லறைப் பணவீக்க விகிதம், தற்போது மூன்று புள்ளி நான்கு எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் அதிகரித்தால் லாரி, பேருந்து, ஆட்டோ, வேன் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இத்தொழிலை நம்பியுள்ள பல கோடி தொழிலாளர்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகும். எனவே, ஒன்றிய மோடி அரசு இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார். சிஐடியு மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் எம்.இராத கிருஷ்ன்,பேரறிவாளன் (எல்எல் எப்), முனுசாமி (ஏஐசிசிடியு), பழனி (யுடியுசி), மாயான்டி (ஏஐசிசிடியு), சுகுமாரன் (ஐஎன்டியுசி), மோகன் (எச்எம்எஸ்), மோகன்ராஜ் (ஏஐயுடி யுசி) சிஐடியு மாவட்டச் செயலா ளர்கள் வி.குப்புசாமி (வட சென்னை), எஸ்.கே.முருகேஷ் (மத்தியசென்னை), ஜி.செந்தில் குமார் (தென்சென்னை), ஏஐடியுசி மத்தியசென்னை மாவட்டத் தலைவர் மாரியப்பன், செயலாளர் மு.சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.