ஒன்றிய மோடி அரசின் நிர்வாக திறனின்மையால் தொழில் நகரங்களில் உற்பத்தி முடங்கும் அபாயம்!
15 Jun 2026, 12:38 am

ஒன்றிய மோடி அரசின் நிர்வாக திறனின்மையால் தொழில் நகரங்களில் உற்பத்தி முடங்கும் அபாயம்!

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தை சாக்குப்போக்காக காட்டி, உள்நாட்டு பொருளாதாரத்தை ஒன்றிய பாஜக அரசு சீரழித்து வருவதன் நேரடி விளைவை இன்று ஒட்டுமொத்த தமிழகமும், குறிப்பாக மேற்கு மண்டல தொழில் நகரங்களும் அனு பவிக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து அதிக ரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு, புதிய டீசல் கட்டுப்பாடுகள், வணிக சிலிண்டர் தட்டுப் பாடு, சுங்கக்கட்டண நெருக்கடி என அனைத்துப் பிரச்சனைகளும் ஒரே நேரத்தில் தாக்குவதால், தமிழகத்தின் தொழில் தலைநகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தியும் சரக்கு போக்குவரத்தும் முற்றிலும் முடங்கும் பேரா பாயம் உருவாகியுள்ளது.

பாஜக அரசின் விசித்திரப் பொருளாதாரம்

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பெட் ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சூழலை காரணம் காட்டி இந்த விலை உயர்வை நியாயப்படுத்த ஒன்றிய அரசு முயன்றாலும், தற்போதைய பொருளாதாரத் தரவுகள் இவர் களின் நிர்வாக திறனின்மையையே அம்பலப் படுத்துகின்றன. முன்பு சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு 110 ரூபாயாக இருந்தபோது, இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் ரூ.67 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று டாலர் மதிப்பு ரூ.100 ரூபாய்க்குள்ளாக குறைந்திருக்கும் நிலை யிலும், பெட்ரோல், டீசல் விலை 108 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படு வது அதிர்ச்சியளிக்கிறது. டாலர் மதிப்பு சரிந்தும் உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக் காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தரும் மக்கள் விரோத கொள்கை யையே ஒன்றிய பாஜக அரசு கடைப்பிடித்து வரு கிறது.

லாரி வாடகை 15% உயர்வு எரிபொருள் விலை உயர்வால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள சரக்கு போக்குவரத்து துறையினர், வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் லாரி வாடகை கட்டணங்களை சுமார் 15 சத வீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு பெடரேசன் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட் டுள்ளது. இது குறித்துப் பேசிய லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் முருகேசன்: டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்ந் துள்ளதால் லாரிகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொழிலை காப்பாற்ற 15% வாடகை உயர்வு கட்டாயமாகிறது. இதுபோக, காலாவதியான சுங்கச்சாவடிகளிலும் தொடர்ந்து கட்டணம் வசூலித்து எங்களை நசுக்குகிறார் கள். முன்கூட்டியே அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்தி யும், ஆண்டுக்கு இருமுறை சுங்கக்கட்ட ணத்தை உயர்த்தி வதைக்கிறார்கள். ஒரு முறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை ஒன்றிய அரசு கொண்டு வர வேண் டும், என வலியுறுத்தியுள்ளார்.

தொழில்துறையின் முதுகெலும்பை உடைக்கும் உத்தரவு

மின்சார பற்றாக்குறை நிலவும் காலங்க ளில் தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கும் உற்பத்திக்கும் டீசல் இன்றிய மையாதது. இச்சூழலில், தொழிற்சாலைக ளுக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு தொழில்துறையினரை இடியாப்பச் சிக்கலில் தள்ளியுள்ளது. டீசலை நம்பி இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் மூலமே பல்லாயி ரக்கணக்கான குறு, சிறு தொழில்கள் (MSMEs) வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பா டால் ஒட்டுமொத்த உற்பத்தி சங்கிலியும் தடைபட்டு, கடுமையான பொருளாதார முடக் கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு

மேலும், வணிகப் பயன்பாட்டிற்கான எரி வாயு தட்டுப்பாடு மற்றும் தொடர் விலை ஏற்றத்தின் காரணமாக தொழில் துறையின ரும், உணவகங்களும் கடும் பாதிப்பை சந்தித் துள்ளனர். 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை வாங்கி தொழில் செய்யும் அவல நிலைக்கு சிறு தொழிற்சாலைகள் தள்ளப்பட்டுள்ளன. இவ்வளவு கூடுதல் விலை கொடுத்து சிலிண்டர் வாங்கும் அளவுக்கு லாபம் இல்லாததால், பல நிறுவனங்கள் மூடப்பட்டு, தொழிலாளர் கள் வேலை இழந்து வருகிறார்கள். மேலும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேற்கு மண்டல மாவட்டங்களில் சங்கிலிப் பாதிப்புகள்

ஒன்றிய அரசின் இத்தகைய தவறான பொரு ளாதார கொள்கைகளால் மேற்கு மண்ட லத்தின் முக்கியத் தொழில்கள் அனைத்தும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின் றன: குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை உயர்வால் மூலப்பொருட்களை கொண்டு வரு வதற்கான போக்குவரத்துச் செலவு அதிக ரித்துள்ளது. இதனால் பம்ப்செட் மற்றும் பவுண் டரி தொழில்கள் முடங்கி, உற்பத்தியான பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் தேக்கமடைந்துள்ளது. ஏற்கனவே நூல் விலை ஏற்றத்தால் தத்த ளித்துக் கொண்டிருக்கும் திருப்பூர், தற்போது லாரி வாடகை மேலும் உயர்ந்தால் வெளிநாடு களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஆடை களை அனுப்ப முடியாமல் சர்வதேசப் போட்டி யில் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்படும் அபா யம் உள்ளது. ஈரோட்டில் ஜவுளிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் வாடகை உயர்வ தால் விசைத்தறி உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். சேலத்தின் ஜவ்வரிசி மற்றும் வெள்ளித் தொழிலும் இதே போக்கு வரத்து நெருக்கடியால் முடங்கும் நிலை உரு வாகியுள்ளது. இதேபோன்று, நாமக்கல் மாவட் டத்தில் முட்டை மற்றும் கோழித்தீவன போக்கு வரத்துக்கான செலவு அதிகரித்துள்ளதால் பண்ணைத் தொழில் நசிவடைந்துள்ளது. லாரி தொழில் நசுக்கப்படுவதால் புதிய வாகனங்கள் வாங்குவது குறைந்து, பாடி பில்டிங் தொழி லும் சரிவை சந்தித்துள்ளது.

வாழ்வாதாரத்தை இழக்கும் தொழிலாளர்கள்

இதுகுறித்து, கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் சம்மேளனத்தின் (TACT) தலைவர் ஜேம்ஸ் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், ஏற்கனவே தொழில் துறை மூலப்பொருள் விலை ஏற்றம், மின்கட் டண உயர்வு, தொழிலாளர்களுக்கான சம்பள நெருக்கடி மற்றும் சர்வதேசச் சந்தை மந்த நிலை என பல அடுக்கடுக்கான பிரச்சினை களால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ’தொழிலை பேசாமல் மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல சொல் வது’ போல் உள்ளது.

தொழிலாளர்கள் பலர் இருசக்கர வாகனங் களில்தான் பணிக்கு வருகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வால் அவர்களது பட்ஜெட் பற்றாக் குறையாகி, சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார் கள். ஆனால், முதலாளிகளோ வாங்கிய கட னுக்கு வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். வட்டி விகிதங்களையாவது ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு ஏற்கவில்லை, என தனது ஆதங்கத்தை தெரிவித்தார். தொழில்துறையினர் மற்றும் சிறு குறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசி, இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஒன்றிய பாஜக அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் மவுனம் காப்பது அதன் நிர்வாக திறனின்மை யையே காட்டுகிறது. வெளிநாட்டுப் போரை காரணம் காட்டி உள்நாட்டுத் தொழில்களை பலி கடா ஆக்குவதை நிறுத்த வேண்டும்.

ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, லாரி வாடகை உயர்வை கட்டுப் படுத்த டீசல் விலையைக் குறைக்க வேண் டும்; தொழிற்சாலைகளுக்கான 200 லிட்டர் டீசல் கட்டுப்பாட்டை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்; வணிக சிலிண்டர் தட்டுப் பாட்டை நீக்க வேண்டும். இல்லையெனில், ஒட்டு மொத்த மேற்கு மண்டலமும் மிகக் கடுமை யான பொருளாதார பின்னடைவையும், லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு இழப்பையும் சந்திக்கும் பேரபாயம் உள்ளது. -கவி