தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டீசல் விற்பனைக்கு மோடி அரசு புதிய கட்டுப்பாடு மருத்துவமனை, தொலைத் தொடர்பு சேவை முடங்கும் அபாயம்

14 Jun 2026, 9:30 pm
டீசல் விற்பனைக்கு மோடி அரசு புதிய கட்டுப்பாடு மருத்துவமனை, தொலைத் தொடர்பு சேவை முடங்கும் அபாயம்

டீசல் விற்பனைக்கு மோடி அரசு புதிய கட்டுப்பாடு மருத்துவமனை, தொலைத் தொடர்பு சேவை முடங்கும் அபாயம்

மேற்கு ஆசிய நெருக்கடி சமாளிக்க முடியாமல், அதற்கு மாற்று வழியை கண்டறியாமல் ஒன்றிய மோடி அரசு மக்கள் தலையில் இடியை இறக்கி தொடர்ச்சியாக சிரமத்தை ஏற் படுத்தி வருகிறது.

இந்நிலையில், நாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்ப னைக்கு மோடி அரசு கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் ஜூன் 11அன்று பிறப் பித்த அவசர உத்தரவில், “பெட் ரோல் பங்குகளில் ஏற்படும் தட்டுப் பாட்டைத் தடுக்க தொழிற்சாலை களும் வணிக நிறுவனங்களும் சில் லறை பெட்ரோல் பங்குகளில் டீசல் வாங்க முற்றிலும் தடை விதிக்கப் படுகிறது. ஒரு சாதாரண வாடிக்கை யாளர் அல்லது ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் மட்டுமே டீசல் வழங்க வேண் டும். இந்தத் தற்காலிக உத்தரவு அடுத்த 90 நாட்களுக்கு (3 மாதங் கள்) அமலில் இருக்கும். தேவைப் பட்டால் மேலும் நீட்டிக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள்

மோடி அரசின் இந்த உத்தரவு மருத்துவமனைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தொலைத் தொடர்புத் துறையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெரிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் தடையின்றி இயங்க டீசல் ஜெனரேட்டர்கள் மிக வும் அவசியம். மின் விநியோ கத்தில் ஒரு சில நிமிடங்கள் பாதிப்பு ஏற்பட்டாலும் நோயாளிகளின் உயி ருக்கே ஆபத்து ஏற்படும். இத்த கைய சூழலில், தற்போதைய கட் டுப்பாட்டால் அவசர காலத்திற்குத் தேவையான டீசலைச் சேமித்து வைக்க முடியாமல் மருத்துவ மனை நிர்வாகங்கள் அச்சமடைந்துள்ளன.

தொலைத்தொடர்பு

மொபைல் கோபுரங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு டீசல் இன்றியமையாதது. மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் இந்த கோபு ரங்கள் முடங்கினால், இந்தியாவின் சுமார் 130 கோடி வாடிக்கையாளர் களின் டேட்டா, அழைப்புச் சேவை கள் பாதிக்கப்படும். அவசரக் காலத் தொடர்புகள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக ‘டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம்’ தொலைத்தொடர்புத் துறைக்கு எச்சரிக்கை கடிதம் எழு தியுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

ஐடி நிறுவனங்கள் - டேட்டா சென்டர்கள்

அதிகரித்து வரும் மின் தேவை யைச் சமாளிக்கவும், கணினிகள் முடங்காமல் இருக்கவும் ஐடி நிறு வனங்களும், தரவு மையங்களும் ஜெனரேட்டர்களையே நம்பி யுள்ளன. சில்லறை விலையில் டீசல் கிடைக்காத பட்சத்தில், அவர்கள் கூடுதல் விலை கொடுத்து மொத்த விலையில் வாங்க வேண்டியிருக் கும். இதனால் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரிக்கும் என தொழில் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

வலுக்கும் கோரிக்கை

மொத்தமாக ஒப்பந்தம் செய் துள்ள பெரிய நிறுவனங்க ளுக்குப் பாதிப்பு இல்லை என்றா லும், சில்லறை விற்பனையை நம்பி யிருக்கும் சிறிய நிறுவனங்கள் மற் றும் அத்தியாவசியச் சேவைகள் நலிவடையும் சூழல் உருவாகி யுள்ளது. எனவே, மருத்துவமனை கள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் போன்ற அத்தியா வசியச் சேவைகளுக்கு இந்த 200 லிட்டர் கட்டுப்பாட்டில் இருந்து உட னடியாக விலக்கு அளிக்க வேண் டம் என ஒன்றிய அரசுக்குக் கோரிக் கைகள் வலுத்து வருகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.