தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற சதியா? 10 நாள் கடந்தும் மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததாக அறிவிக்காத மோடி அரசு

yesterday
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற சதியா? 10 நாள் கடந்தும் மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததாக அறிவிக்காத மோடி அரசு

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற சதியா? 10 நாள் கடந்தும் மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததாக அறிவிக்காத மோடி அரசு

புதுதில்லி2026ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 அன்று நிறைவடைந்தது.மக்களவையும் மாநிலங்களவையும் ஒரே நாளில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதேசமயம் பொதுவாக ஒரு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை முடிவடையும் நேரங்களில் (கூட்டத் தொடர் முடிவடையும் நெருங்கிய நாட்களில்) ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டால் கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இதுதான் நாடாளுமன்ற மரபு. ஆனால் 2026ஆம் ஆண்டுக்கான நாடாளுமன் றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டு, ஞாயிறன்றுடன் 10 நாட்கள் ஆகியும் கூட் டத்தொடரை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்வதற்கான அறிவிப்பை நாடாளுமன்றம் இன்னும் வெளியிடவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தொகுதி மறுவரையறைபுதிய கூட்டத் தொடரைக் கூட்டாமலேயே

தொகுதி மறுவரையறை

உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான ஒன்றிய மோடி அரசு மழைக் காலக் கூட்டத் தொடரை நிறைவு செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:“மக்களவையும் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்படுவதற்கும் அதனை அதிகாரப்பூர்வமாக முடிப்பதற்கும் இடைப்பட்ட காலம் பொதுவாக இரண்டு முதல் நான்கு நாட்களே ஆகும். ஆனால் 2026ஆம் ஆண்டின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்களாகியும் ஏன் இன்னும் அது அதிகாரப்பூர்வமாக முடிக்கப்படவில்லை? தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைச் சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்காக, ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா அரசுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் தேடிக்கொண்டிருக்கிறாரா?”கடந்த காலங்களிலும் இதே போன்ற இடைவெளிகள் இருந்தன.

உதாரணமாக, 2015ஆம் ஆண்டு (மோடி பிரதமரான அடுத்த வருடம்) மழைக்காலக் கூட்டத் தொடரின் போது 28 நாட்களும், 2021ஆம் ஆண்டு கூட்டத் தொடரின் போது 20 நாட்களும் இடைவெளி இருந் தது. இருப்பினும், அந்தக் காலக்கட்டங்களில் இதுபோன்ற நகர்வுகள் (மசோதாவிற்காக) பரிசீலனையில் இல்லை. ஆனால் இப்போது ஏற் பட்டுள்ளஇந்த அசாதாரண தாமதத்திற்கு என்ன காரணம்? பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முறைப்படி முடிக் கப்படுவதே ‘பிரோகேஷன் (நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முறைப்படி நிறைவு செய்யும் நிகழ்வைக் குறிப்பதாகும்)’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 85(2)-இன் கீழ் விவரிக்கப்பட் டுள்ளது.இவ்வாறு கூறி, எம்.என்.கௌல் மற்றும் எஸ்.எல்.சாக்தேர் எழுதிய ‘நாடாளுமன்ற நடைமுறைகளும்செயல்முறைகளும் (Practice and Procedure of Parliament)’ நூலின் பகுதியையும் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.