தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வயிறுகளில் அதிகரிக்கும் வரிக்கோடுகள் - செ.முத்துக்கண்ணன்

16 May 2026, 9:08 pm
வயிறுகளில் அதிகரிக்கும் வரிக்கோடுகள் - செ.முத்துக்கண்ணன்

வயிறுகளில் அதிகரிக்கும் வரிக்கோடுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு திடீரென நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும், வெளி நாடு செல்வதைத் தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் இணையவழி மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும், வாகனம் வைத்திருப்போர் வீடுகளில் நிறுத்தி விட்டு பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்த வேண்டும், எரிபொருள் சிக்க னத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு அரபு நாடுகள் சுற்றுப்பய ணத்திற்குச் சென்றுவிட்டார். எதற்கு இந்த பில்டப்; ஏன் இந்த உபதேசம் எனப் பார்த்தால், ஓரிரு நாளில் பெட்ரோலிய எரிபொருள் விலையை உயர்த்தி விட்டார்கள். இதற்குத்தான் இந்த உபதேசம்.

கார்ப்பரேட் பாசத்தின் விளைவு

இன்று கடும் பொருளாதார நெருக்க டியை நாடு சந்தித்து வருகிறது. காரணம், ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதர வுக் கொள்கையும், நவீன தாராளமயக் கொள்கையின் தாக்கமும், அவர்களின் நலன்கள் சார்ந்த முன்னெடுப்பும் பெரும் நெருக்கடியை இந்தியாவில் உருவாக்கி வருகிறது. இதனை மறைக்க ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேலிய போரைப் பயன்படுத்தி, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணமா கக் கூறுகிறது மோடி அரசு. இது உண்மை யா? வெனிசுலா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியா 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரு கிறது. இந்திய அரசின் உறுதியற்ற அரசியல் நிலையும், அமெரிக்க சார்புத் தன்மையுமே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம்.

குறிப்பாக, அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் அடியாளாக உள்ள இஸ்ரேலுடன் தனது நண்பர் அதானிக்காக இந்தியப் பிரதமர் நெருக்கம் காட்டுகிறார். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்குத் தனது ஆதரவையும், நம்பிக்கையையும் தெரிவித்த மோடியின் யூத இன வெறிப் பாசம், அரபு நாடுகளின் மத்தியில் கடும் எரிச்சலையும், அதிருப்தி யையும் உருவாக்கியுள்ளது. கூட்டுச் சேரா நாடுகளை வழிநடத்திய இந்தியா, அமெ ரிக்காவின் இளைய பங்காளியாக மாறி யதன் காரணமாக இந்தியாவின் மீதான மதிப்பும், மரியாதையும், இறை யாண்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் இந்தியா வின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத் துள்ளது.

மூலதனக் குவிப்பு

150 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாகவும், பொருளாதாரச் சந்தையும் உள்ள இந்தியாவைப் புறக்கணிக்க எந்த நாடும் துணியாது. அந்நிய மூலதனம் குவிந்த வண்ணம் இருந்தது. அது இந்திய வளங்களின் மீதான லாபப் பங்கீட்டை மேலும் மேலும் தீவிரப்படுத்தியது. 1991-இல் உலக வர்த்தக அமைப்பு, ஐஎம்எஃப், உலக வங்கியின் நிர் பந்தத்தில் இந்தியாவில் நவீன தாராளமயக் கொள்கைகள் அம லாக்கப்பட்ட பின்னணியில், இன்று இந்திய மொத்த வருமானப் பங்கீட்டில், ஒரு சதவீதப் பணக்காரர்களிடம் 70 சதவீ தமான சொத்துக்கள் குவியும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இதனுடைய வெளிப்பாடே, பெரும் பகுதி விவசாயிகளைக் கொண்டுள்ள தேசத்தில் விவசாய நலன்களுக்கு எதிராக வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்க ளுக்கு எதிரான சட்டத் தொகுப்புகளையும் முதலாளிகள் நலனுக்காக என மாற்றி அமைத்துள்ளது. இந்திய வளங்களை, குறிப்பாக வனங்கள், கனிமச் சுரங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், தேச உடைமையாக்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உட்பட அனைத்தையும் தாரை வார்க்கும் நிலையே உள்ளது. அதற்குப் பணமாக்கல் திட்டம் என்ற பெய ரில் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுத்து, தேர்தல் பத்திரங்கள் பெயரில் நிதியைப் பெற்றுக்கொள்ளும் மோசடித்தனம் அரங்கேறுகிறது. பெரும் முதலாளிகள் நலனுக்காக உழைப்பாளிகளின் வியர்வையில் உருவான கட்டமைப்பு களைப் பலி கொடுக்கிறது.

கார்ப்பரேட் நலனும், சிறுகுறு தொழில் அழிப்பும்

ஆனாலும் இது கார்ப்பரேட் வேட்டை க்குப் போதுமானதாக இல்லை. இதனால் கார்ப்பரேட்டுகள் தேசம் விட்டு தேசம் தாண்டி மூலதன வேட்டைக்கு நகருகிறார் கள். தற்போது 2.01 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது. இதற்குத் தேவை யான நிதி மூலதனத்தை இந்தியப் பொ துத்துறை வங்கிகள் மூலம் பெற்று தங்க ளுடைய லாபக் குவிப்பைத் தீவிரப்படுத்தி யுள்ளார்கள். நாட்டின் செல்வ வளங்களை ஒரு பகுதியினர் அனுபவிக்கவும், அள்ளிச் செல்லவும் அனுமதித்ததன் விளைவால் ஏற்பட்டுள்ள வருமானப் பற்றாக்குறையை நாட்டு மக்களின் மீது திணிக்க மோடி அரசு நினைக்கிறது.

உதாரணமாகக் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெருமுதலாளிகளுக்கான வங்கி கள் வழங்கிய வராக்கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, வரிச் சலுகை, கார்ப்ப ரேட் வரி குறைப்பு என இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டில் 50 சதவீதம் அளவு அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் மோடி அரசு யாருக் கானது எனப் புலப்படும். மொத்த தேசத்தின் சிக்கனம் சிலரின் நன்மைக்கா கவா என்ற கேள்வி எழுகிறது. கார்ப்பரேட்டு களுக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு, ஏழை எளிய உழைப்பாளி மக்க ளுக்குக் கிள்ளிக் கொடுக்கக்கூட மன மில்லாத நிலையில் தான் உள்ளது.

ஏற்கெனவே மோடி அரசு பதவியேற்ற பின் தொடர்ச்சியாகக் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. உதாரணத்திற்கு, உயிர் பயத்தில் மக்கள் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 2020-2021 கோவிட் ஊரடங்கு காலத்தில் மட்டும் ஐடி நிறுவனங்கள் 10-15 சதவீதமும் (டிசிஎஸ் நிறுவனம் ரூ. 32,562 கோடி லாபம் அடைந்தது), மருந்து கம்பெ னிகள் 15-20 சதவீதமும் (சில நிறுவனங் கள் 40 முதல் 50 சதவீதமும்), வங்கித்துறை யில் தனியார் வங்கிகள் (2021-இல் எச்டிஎப்சி ரூ. 31,116 கோடி 18 சதவீதம், ஐசிஐசிஐ ரூ. 16,193 கோடி 50 சதவீதமும் முந்தைய ஆண்டை விட லாபத்தை அடைந்தது). ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், இ-கா மர்ஸ் நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, சிமெண்ட் மற்றும் ஸ்டீல் நிறு வனங்கள் பெரும் லாபத்தைப் பெற்றன. இதே காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்திக்கு எந்த ஊக்குவிப்பும் இல்லாத நிலையில், அரசுகளின் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, இறக்குமதி ஏற்றுமதி குறித்தான அரசின் வரிகள் கடும் பாதிப்பை உருவாக்கின. அந்த கோவிட் ஊரடங்கு கால அனுபவத்தைக் கணக்கில் கொள்ளா மலும், தனது பொருளாதாரக் கொள்கை களின் விளைவாகப் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், திட்டமிடாத லாக்ட வுன் என அதலபாதாளத்தில் இந்தியத் தொழில், விவசாய மற்றும் சேவைத் துறையைத் தள்ளிவிட்டுச் சிக்கனத்தைப் பற்றிப் பேசுகிறார் மோடி. “குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்” என்பது போல, தற்போது விலைவாசி உயர்வு, பண வீக்கம், ரூபாய் மதிப்பு குறைந்து வருவது (டாலருக்கு நிகராக 96 ரூபாய் என்ற வீழ்ச்சி) பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது.

லாக்டவுன் ஆன உழைப்பாளிகள் வாழ்க்கை

அதே நேரத்தில் இந்தியா முழுவதும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 30 சதவீதம் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டன. அவர்களை நடுத்தெருவில் மோடி அரசு நிறுத்தியது. இதில் பணிபுரிந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, தங்களது சொந்த ஊர்க ளுக்குத் திரும்ப முடியாமல் நாடு முழுவ தும் பல லட்சம் தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே சென்ற அவ லத்தைப் பார்த்தோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உறங்க இடமில்லாமல் ரயில் தண்டவாளத்தில் உறங்கி, ரயில் மோதிப் பலியான சம்பவங்களையும் பார்த்தோம். பெரும் நிறுவனங்களின் லாபத்திற்கு அடிப்படை, அதன் நிர்வாகத் திறனே கார ணம் எனச் சொல்லப்படுகிறது. உண்மை யில் அது நிர்வாகத் திறனல்ல, உழைப் பாளிகளின் மீதான உழைப்புச் சுரண்டல். ஊழியர்கள், தொழிலாளிகள், உழைப் பாளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் பறித்து, மூலதனச் செலவில் உழைப்பின் பங்கிற்கான நிதி ஆதாரங்களை வெட்டியதே காரணம். போனஸ் குறைப்பு, ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பெரும் பகுதி மாற்றியது, வீட்டிலிருந்து பணி, நிர்வாகச் செலவினங்களில் கட்டிட வாடகை, போக்குவரத்துச் செலவு, உணவுக்கூடச் செலவு, மின்சாரம், பராமரிப்புச் செலவினங்கள் அனைத்தும் குறைந்ததும், வங்கிகளில் கடனுக்கான வட்டிகள் நிறுத்தி வைப்பு, வட்டிவிகிதங்கள் குறைக்கப்பட்டதும் இந்நிறுவனங்களின் லாபத்திற்கு வழிவகை செய்தது. ஆனால், தொழிலாளர்கள் வாழ்வில் மண்ணை அள்ளிப்போட்டது.

மோடியின் சிக்கனம் யாருக்கு?

ஒரு தேசத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் உள்நாட்டுச் சந்தையின் தேவை யைப் பூர்த்தி செய்வது என்பது விலை வாசி உயர்வைக்கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவி டும். அதே நேரத்தில் இறக்குமதி அதிக ரிக்கும் எனில், எதிர்மறையான விளைவு களையே உருவாக்கும். இதனை அம லாக்க மக்கள் நலன் சார்ந்த முன்னெ டுப்புகளே அவசியம். ஆனால், மோடி அரசு கார்ப்பரேட் நலன் அரசாக இருப்ப தால் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சுமையைக் கூட்டுகிறது.

2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கம் தொடர்பான முக்கிய தரவுகள், மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 மாத ஒன்றிய அரசின் வெளியீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி சில்லரை பணவீக்கம் (Retail Inflation) ஏப்ரல் 2026-இல் 3.48% ஆகப் பதிவாகி யுள்ளது. மார்ச் 2026-இல் இது 3.40% ஆக இருந்தது. பணவீக்க விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 4% என்ற வரம்பிற்குள்ளேயே உள்ளதாகக் கூறி னாலும், உண்மையில் ஏப்ரல் 2026-இல், கிராமப்புற பணவீக்கம் 4.26% ஆகவும், நகர்ப்புற பணவீக்கம் 4.10% ஆகவும் இருந்தது. இதனால் கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வு சற்று அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு 4.20% ஆக இருந்தது.

தற்போது பெட்ரோலியப் பொருட்கள் விலை ரூ. 3 முதலும், எரிவாயு சிலிண்டர் வீட்டுக்கு ரூ. 50-உம், வர்த்தக சிலிண்டர் ரூ.993-உம் உயர்த்தப்பட்டுள்ளது. இது உழைப்பாளிகளின் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இத்தருணத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உழைப்பாளிகளுக்குச் சம்பள உயர்வு இல்லை என வட இந்தி யாவில் தொழிலாளர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உண வுக்கூடங்கள், சிறு உணவகங்கள், பேக்கரி கள், சாலையோரக் கடைகளில் பொருளின் விலை கடுமையாக ஏறியுள்ளது. பொருளின் அளவு குறைந்துள்ளது. 4 இட்லி சாப்பிட்ட இடத்தில் 3 இட்லியாக மாறி யுள்ளது. ஒரு கப் தேநீர் விலை ரூ. 20 – ரூ. 25 எனப் பேக்கரிகளில் உயர்ந்துள் ளது. அதே நேரத்தில் கப்பில் தேநீர் அளவு குறைந்துவிட்டது. வடையின் விலை உயர்ந்து, அளவு சிறிதாகிவிட்டது. சிலிண்டர் விலையைக் காரணம் காட்டி உணவு வகைகளின் அளவைக் குறைத்து விட்டனர். இது உழைப்பாளி மக்களின் உணவு நுகர்வினை வெட்டிச் சுருக்கு கிறது. விலைவாசி உயர்வு உண்டியைச் சுருக்குகிறது. வயிறுகளில் வரிக்கோ டுகள் அதிகரிக்கிறது. போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என நிறுவனங்கள், தனியார் வாகன உரிமை யாளர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

எரிபொருட்கள் விலையுயர்வு யாரின் நலனுக்காக?

எதார்த்தத்தில் இடதுசாரிகள் ஆதர வோடு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, சர்வதேசச் சந்தையில் 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (Barrel) $147.27 என்ற உச்ச விலையைத் தொட்டது. அதே கால கட்டத்தில் ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $147.50 வரை விற்பனையானது.

அன்று இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ. 45 முதல் 51 ரூபாயாகவும், டீசல் விலை ரூ. 31 முதல் 35 ஆகவும் முக்கிய நகரங்களில் விற் பனையானது. இது 2017 வரை சர்வதேசச் சந்தையில் ஏறினாலும் விலையை இந்தியப் பெட்ரோலிய ஆணையமும், அரசும் தீர்மா னிக்கும் நிலை இருந்தது. 2017-இல் பெட் ரோல் ரூ. 63-70உம், டீசல் ரூ.53-58 உம் என இருந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோ லியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மா னித்துக்கொள்ளலாம் என அறிவித்த பின்னணியில் தினமும் விலை மாறும் முறை அறிவிக்கப்பட்டது. இது இந்திய மக்களிடம் கடும் தாக்கத்தை உரு வாக்கியது.

இதன் வெளிப்பாடே, இன்று வெனிசுலா நாட்டில் உலகக் கச்சா எண்ணெய் வளத்தில் 17 சதவீதம் கிடைக்கிறது என்ற நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதியைக் கடத்தித் தனது நாட்டின் சிறையில் அடைத்து வைத்து, அந்நாட்டின் எண்ணெய் கிணறுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் உலகின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ரூ. 27 லட்சம் கோடி செலவில் ரிலையன்ஸ் நிறு வனம் நிறுவும் என டொனால்டு டிரம்ப் அறிவிக்கிறார். இதற்கான பணம் இந்திய வங்கிகளில் இருந்தே சூறையாடப்படும். அதுதான் கடந்த கால வரலாறு. இந்த கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்திய மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்கு தலை எதிர்த்துத்தான் இடதுசாரிகள் போ ராடி வருகிறார்கள். இந்த உண்மையை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பேசாத ஊடகங்கள் உண்மை யைப் பேச வேண்டும். சமூக வலைதள வாசிகள் இந்த உண்மையை உரசிப் பார்க்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.