தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசின் கார்ப்பரேட் பாசம்10 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி

12 Aug 2026, 8:55 pm
மோடி அரசின் கார்ப்பரேட் பாசம்10 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி

மோடி அரசின் கார்ப்பரேட் பாசம்10 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி

கடந்த 12 நிதியாண்டுகளில், பெரிய நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறைக்கு வழங்கப்பட்ட சுமார் 10 லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வங்கிகள் தள்ளுபடி (Write-off) செய்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறை சார்ந்த கடன் பெற்றவர்களுக்குவழங்கப்பட்ட சுமார் 9,95,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.மேலும் 25 ஆவது நிதி ஆண்டில் 63,19,057கோடி ரூபாயிலிருந்து 26 ஆவதுநிதி ஆண்டில் 69,21,734 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக 1,48,753 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அந்தத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சவுத்ரி நாடாளுமன்றத்தில் அளித்த தகவலில், 2025 செப்டம்பர் 30, வரையிலான கடந்த ஐந்தரை நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் (PSBs) மொத்தம் 6.15 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளதுதெரிய வந்தது.

மேலும் ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஐந்து நிதியாண்டுகள் மற்றும் 30.9.2025 வரையிலான நடப்பு நிதியாண்டில் (தற்காலிக தரவு) பொதுத்துறை வங்கிகள் மொத்தம் 6,15,647 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன” என்று சவுத்ரி கடந்த ஆண்டே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.