கல்வித் துறையைச் சீரழிக்கும் மோடி அரசு
31 May 2026, 9:45 pm

கல்வித் துறையைச் சீரழிக்கும் மோடி அரசு

ஒன்றிய பாஜக அரசு தனது கார்ப்பரேட் சார்புக் கொள்கைகளால் நாட்டின் கல்வித் துறையை முற்றிலுமாகச் சிதைத்து வருகிறது என்பதற்குச் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள இமாலயக் குளறு படிகளே சாட்சியமாகும். முறையான முன் திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றி, அவசர கதியாகப் புகுத்தப்பட்ட ‘திரைவழி விடைத்தாள் திருத்தும் முறை’ (On-Screen Marking - OSM) முற்றிலும் தோல்வி யடைந்து, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டைக் காட்டி லும் சிபிஎஸ்இ தேர்ச்சி விகிதம் 88.39 சதவீதத்தி லிருந்து 85.29 சதவீதமாகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நிர்வாகத்திறன் அற்ற மோடி அரசு, தனது “கூட்டுக் களவு” கார்ப்பரேட் முதலாளி களுக்குப் பலன் சேர்க்கும் நோக்கில், ‘COEMPT Eduteck’ என்ற தனியார் நிறுவனத்திற்கு விடைத் தாள் திருத்தும் மென்பொருள் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இந்தத் தனியார் நிறுவனம், கடந்த காலங்களில் தெலுங்கானாவில் இருமுறை இத்தகைய தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட ‘குளோபரினா’ (Globarena) நிறுவ னத்தின் மறுபெயரே ஆகும். ஒரு மாணவரின் புலனாய்வு வலைப்பதிவு வெளிப்படுத்தியுள்ள படி, இந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கு வதற்காகச் சிபிஎஸ்இ தனது நிதித் தகுதிகளைப் பாதியாகக் குறைத்து, கணினிப் பாதுகாப்புச் சான்றிதழ்களைத் தளர்த்தி, ‘கருப்புப் பட்டியல்’ என்ற வார்த்தையையே விதிமுறைகளில் இருந்து நீக்கி அப்பட்டமான ஊழலில் ஈடுபட்டுள்ளது.

முறையான கணினிப் பயிற்சியோ, டிஜிட்டல் உள்கட்டமைப்போ இல்லாத 33,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளி களின் ஆசிரியர்கள், தேர்வு தொடங்குவதற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் இந்தத் தொழில்நுட்பம் குறித்துத் தற்காலிகமாகத் தயார் செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் மதிப்பெண் கூட்டல் பிழைகள் மலிந்துள்ளன. அதிர்ச்சி யடைந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் விடைத்தாள் பிரதிகளைக் கோரி விண்ணப்பித்த போது சிபிஎஸ்இ-யின் இணை யதளமும் செயலிழந்து முடங்கியது. நகல் பெற்ற மாணவர்களுக்கு மங்கலான பக்கங்கள், விடுபட்ட மதிப்பெண்கள் மற்றும் பிற மாணவர் களின் விடைத்தாள்கள் வரும் கொடுமை அரங்கேறியுள்ளது.

நாட்டின் உயர்கல்வியையும் லட்சக்கணக் கான ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத் தையும் தீர்மானிக்கும் ஒரு பொதுத் தேர்வை, கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்காகவும் ஊழ லுக்காகவும் பகடைக்காயாகப் பயன்படுத்திய மோடி அரசு, மாணவர்களின் மன உளைச்சலுக்கும் தரவுப் பாதுகாப்பு மீறல்களுக்கும் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.