தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரும்பு விவசாயிகள் போராட்டத்திற்கு வெற்றி கரும்பு கட்டுப்பாடு சட்ட மசோதாவை ரத்து செய்தது மோடி அரசு!

30 May 2026, 8:38 pm
கரும்பு விவசாயிகள் போராட்டத்திற்கு வெற்றி கரும்பு கட்டுப்பாடு சட்ட மசோதாவை ரத்து செய்தது மோடி அரசு!

கரும்பு விவசாயிகள் போராட்டத்திற்கு வெற்றி கரும்பு கட்டுப்பாடு சட்ட மசோதாவை ரத்து செய்தது மோடி அரசு!

சென்னை, மே 30- கரும்பு விவசாயிகளின் தொடர் போராட் டங்களைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு விரோதமான கரும்பு கட்டுப்பாட்டுச் சட்ட முன்மொழிவு 2026-ஐ, ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன், தமது அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

5 கோடி விவசாயிகளுக்கு எதிரான முன்மொழிவு!

ஏற்கெனவே அமலில் உள்ள கரும்பு கட் டுப்பாட்டுச் சட்டம் 1966-க்கு மாற்றாக கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 2026-ஐ ஒன்றிய பாஜக அரசு முன்மொழிந்தது. இந்த சட்டம் நாடு முழுவதும் உள்ள 5 கோடி கரும்பு விவசாயி களுக்கு விரோதமானது, அதேநேரம் கார்ப்ப ரேட்டுகளுக்கும், தனியார் சர்க்கரை ஆலை களுக்கும் சாதகமானது என்பதால், ஒன்றிய அரசு முன்மொழிந்த சட்டத்தை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அகில இந்திய கரும்பு விவசாயிகள் சம்மேளனம் (AISFF), தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங் கம் சார்பில் ஒன்றிய அமைச்சருக்கு திருத்தங் களும், கருத்துக்களும் அளிக்கப்பட்டன.

நாடு முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்பு!

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சர்க் கரை ஆலைகளைப் பாதுகாத்து மேம்படுத்து வதற்கு திட்டம் முன்மொழியப்படவில்லை, 12.25 சதவிகித பிழி திறனுக்கு கரும்புக்கு விலை நிர்ணயிக்கப்படும், சர்க்கரை விற்பனை விலையோடு கரும்புக்கான விலை இணைக் கப்படும், சர்க்கரை ஆலைகள் நட்டம் என்று கருதினால் மாநில அரசின் ஒப்புதலோடு கரும்பு விலையை குறைத்துக் கொள்ள அனு மதிக்கப்படும் என்பன உள்பட கரும்பு விவ சாயிகளுக்கு விரோதமான அம்சங்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி!

இவ்வாறு, சர்க்கரை ஆலைகளுக்கு ஆத ரவான, ஒன்றிய பாஜக அரசின் கரும்பு கட்டுப் பாடு சட்ட முன்மொழிவுக்கு நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக, கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் 2026-ஐ ரத்து செய்து, 29-05-2026 அன்று மோடி உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளி டம் முழுமையான விவாதத்தை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்து கரும்பு கட்டுப் பாடு சட்டம்-1966இல் தேவையான திருத்தங் களை செய்திட வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், அகில இந்திய கரும்பு விவசாயிகள் சம்மேளனம் (AISFF) ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.