தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிதாக 5 எண்ணெய், எரிவாயுக் கிணறுகள்: பன்னாட்டு நிறுவனத்திற்கு மோடி அரசு அனுமதி

yesterday
புதிதாக 5 எண்ணெய், எரிவாயுக் கிணறுகள்: பன்னாட்டு நிறுவனத்திற்கு மோடி அரசு அனுமதி

புதிதாக 5 எண்ணெய், எரிவாயுக் கிணறுகள்: பன்னாட்டு நிறுவனத்திற்கு மோடி அரசு அனுமதி

சென்னை, செப். 14 - மயிலாடுதுறை மாவட்டத்திற்குக் கிழக்கே வங்கக் கடலில் 81 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள எண்ணெய் வயலில் மேலும் 5 புதிய எண்ணெய், எரி வாயுக் கிணறுகளை அமைப்பதற்கு, ‘ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொட க்‌ஷன் இந்தியா’ என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, அந்த பன்னாட்டு நிறுவனம், தற்போது சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது

வளத்தை சூறையாடும் தனியார் நிறுவனங்கள்

பாஜகவுக்கு அதிகபட்சமாக நன்கொடை வழங்கி வரும் நிறுவனம், அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் ஆகும். இந்த தனியார் நிறுவனமானது, எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக, 4,368 சதுர கி.மீட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிநிறுவனத்திற்கு 32,485 சதுர கி.மீட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாக தமிழக கடற்கரைப் பகுதியில் மொத்தம் 59,017 சதுர கிலோமீட்டர்பரப்பளவு இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், பன்னாட்டு நிறுவனமான ‘ஹார்டி எக்ஸ்ப்ளோ ரேஷன்’ நிறுவனத்திற்கும் புதிதாக 5 எண்ணெய் - எரிவாயு கிணறுகள்அமைக்க ஒன்றிய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிறுவனமானது, ஏற்கெனவே பரங்கிப்பேட்டை யில் 4 கிணறுகள் அமைக்க உரிமம் பெற்றுள்ள ‘ஹிந்துஸ்தான் ஆயில்எக்ஸ்ப்ளோரேஷன்’ (HOEC)நிறுவனத்துடன் நேரடி நிர்வாகத் தொடர்புடையது ஆகும்.

ஒன்றிய பாஜக அரசின்தாராள அனுமதி

புதிதாக 5 எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் தோண்டும் இந்த திட்டம், 1997-இல் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தால்தொடங்கப்பட்டது என்றாலும், பின்னர் பன்னாட்டு நிறுவனமான ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும்புரொடக்‌ஷன்நிறுவனத்துடன் இணைந்த நிலையிலும் 2011-இல் நிறுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் இத்திட்டத்தைத் துவங்கி, தற்போது அதனை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ‘ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா’ நிறுவனம் இறங்கியுள்ளது.இதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும்தேவை என்பதால், அதனிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2026 ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்துள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் ஆபத்து

நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் மீன்வளத்தைநம்பியிருப்பதால், இத்திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று சூழலியல்செயற்பாட்டாளர்கள் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

கிணறுகள் அமைத்து வெளியேற்றப்படும் நச்சு ரசாயனக் கழிவுகளாலும், நடத்தப்படும் அதிர்வுச் சோதனைகளாலும் மீன்களின்நுண்ணுறுப்புகள் அழிந்து மீன்வளம்முற்றிலும் அழியும். எண்ணெய் மற்றும்எரிவாயுவை உறிஞ்சும்போது நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நிலமட்டம் தொடர்ந்து தாழ்ந்துபோகும். கடல் மட்டம் உயரும்.

கடல் மட்டம் உயரும்; நிலப்பரப்பு நீரில் முழ்கும்

தற்போது கடல் மட்டத்திற்கும் மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி படுகையின் நிலமட்டத்திற்கும் இடையே வெறும் 1 மீட்டர் மட்டுமே வேறுபாடு உள்ளது. 2050-க்குள்கடற்கரைப்பகுதிகள் பெருமளவில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது; 2100-ல் காவிரிப்படுகையின் பெரும் பகுதியேகடலுக்குள் காணாமல் போகும் சூழல் நிலவுகிறது. சென்னையில் 114 சதுர கி.மீ. மூழ்கும் என்றெல்லாம் ஏற்கெனவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், ‘ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக்‌ஷன் இந்தியா’ என்ற பன்னாட்டு நிறுவனம், புதிதாக 5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதை ஏற்க முடியாது என்றும், “மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை அனுமதிக்கமாட் டோம் என ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு உடனடியாகக் கடிதம் எழுதவேண்டும்; கடலோரப் பகுதியில் குழாய்கள் அமைப்பதற்கும், எண்ணெய் சேமிப்பதற்கும் தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைஆணையம் அனுமதி வழங்கக் கூடாது; விண்ணப்பத்தையே நிராகரிக்க வேண்டும்” என்று மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.