தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏவுகணை தயாரிப்பும் தனியாருக்கு செல்கிறது! அதானி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு அனுமதி

12 Jul 2026, 9:19 pm
ஏவுகணை தயாரிப்பும் தனியாருக்கு செல்கிறது! அதானி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு அனுமதி

ஏவுகணை தயாரிப்பும் தனியாருக்கு செல்கிறது! அதானி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு அனுமதி

புதுதில்லி நாட்டின் ஏவுகணை தயா ரிப்பு ஒன்றிய பாதுகாப் புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது டிஆர்டிஓ, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் உள் ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் நல்ல முறை யில், சர்வதேச அளவில் போட்டி போடும் அளவிற்கு சூப்பர் தொழில் நுட்பத்துடன் ஏவுகணையை அரு மையாக தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், ஏவுகணை தயா ரிப்பையும் தனியார் நிறுவனங்க ளுக்கு தாரைவார்க்க மோடி அரசு அடாவடியை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பின் படி, முதற்கட்டமாக ஒன்றிய அரசு ஊழி யர்களின் கடின உழைப்பில் டிஆர்டிஓ உருவாக்கிய ‘அஸ்ட்ரா மார்க் - 2 (Astra Mark 2)’ ஏவுகணை யை தனியார் நிறுவனங்கள் தயா ரிக்க அனுமதி வழங்கப்பட உள் ளது. அஸ்ட்ரா மார்க் - 2 உலகதரம் வாய்ந்தது. உலக நாடுகளுடன் போட்டி அளவிற்கு 180 முதல் 200 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது.

இத்தகைய சூழ லில், பிரதமர் மோடியின் நெருங் கிய நண்பரான அதானி, பாஜக விற்கு அதிகளவில் நன்கொடை அளிக்கும் தனியார் நிறுவனங்க ளான டாடா, பாரத் போர்ஜ், மஹிந் திரா மற்றும் ஐகோம் போன்றவை இனி அஸ்ட்ரா மார்க் - 2 ஏவுகணை தயாரிப்பை மேற்கொள்ள உள் ளன.

மேலும், பிரலே (Pralay) எனப் படும் 500 கிலோமீட்டர் தூரம் தாக் கும் திறன் கொண்ட டாக்டிக்கல் பாலிஸ்டிக் ஏவுகணையும் தனி யார் நிறுவனங்களுக்கு தனியா ருக்கு செல்கிறது. ஏற்கெனவே விமானங்கள், ட்ரோன்கள், கடற் படை உபகரணங்கள் போன்றவை தனியாருக்கு சென்றுவிட்டன.

தற்போது ஏவுகணை உற்பத்தியும் தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு தாரைவார்ப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழுப்பல் விளக்கம் இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்துள்ளது.

அர சுக்குச் சொந்தமான பாரத் டைன மிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை.

அதி நவீன ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா போன்ற நட்பு நாடு கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனால் தனியாருக்கு ஏவுகணை தயாரிப்பு ஒப்படைக்கப்படுகிறது என மோடி அரசு மழுப்பலாக விளக் கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.