வீரர் - வீராங்கனைகள் இல்லாமல் கேலோ இந்தியா போட்டிகள் விளையாட்டுத் துறையையும் கடுமையாக தாக்கும் மோடி அரசு
6 Dec 2025, 2:48 pm

வீரர் - வீராங்கனைகள் இல்லாமல் கேலோ இந்தியா போட்டிகள் விளையாட்டுத் துறையையும் கடுமையாக தாக்கும் மோடி அரசு

சூறையாடப்படும் பல நூறு கோடி ரூபாய்

ஜெய்ப்பூர் மோடி பிரதமர் ஆன பின்பு அனைத்து துறைகளும் திவால் நிலைக்கு சென்று வருகின்றன. ஆனால் இதனை கோடி மீடியா ஊடகங்கள் மூலம் மூடி மறைத்தோ அல்லது திசை திருப்பல் மூலமோ சமாளித்து வருகின்றன. தொடர்ந்து தனது மோசமான நிர்வா கத்தால் விளையாட்டுத் துறையையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், அஜ்மீர், உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், கோட்டா, பரத்பூர் ஆகிய 7 நகரங்களில் நடப் பாண்டுக்கான “கேலோ இந்தியா பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகள்” நவம்பர் 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 5ஆம் தேதி அன்று நிறைவு பெற்ற இந்த தொடரை மோடி அரசின் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் நடத்தியது. நாடு முழுவ தும் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் இந்த தொடரில் பங்கேற்றனர். ஒரு பிரிவில் ஒருவர் இந்நிலையில், சில பிரிவுகளில் போதிய அளவு வீரர் - வீராங்கனைகள் இல்லாமல் நடப்பா ண்டுக்கான கேலோ இந்தியா பல்கலைக்கழக தொடர் நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்த யம் மற்றும் ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயங்கள் பிரிவில் தலா ஒருவர் மட்டுமே பங்கேற்றனர். அதாவது ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டும் பிரிவில் ஸ்வர்னிம் குஜராத் விளையாட்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ருச்சித் மோரி தனியாக ஓடி 51 வினாடிகளில் தங்கப்பதக்கம் வென்றார். அதே போல மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் ஹரியானா மாநிலத்தின் குருசேத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மணிஷா தனியாக ஓடி 59.54 வினாடிகளில் தங்கம் வென்றார். தேசிய அளவில் நடை பெற்ற விளையாட்டுப் போட்டியின் 2 முக்கிய மான விளையாட்டுப் பிரிவில் மற்ற போட்டியா ளர்கள் இன்றி தனியாக ஒரு வீரர், வீராங்கனை மட்டுமே பங்கேற்றது ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்றாலும், இது எப்படி நடந்தது? என்பது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. மக்கள் வரிப்பணம் சூறை கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து கேலோ இந்தியா போட்டிகளை மோடி அரசு நடத்தி வருகிறது. போட்டியை நடத்துவது மட்டும் மோடி அரசின் பொறுப்பல்ல, வீரர் - வீராங்க னைகளை அழைத்து வருவது மற்றும் இதர ஏற்பாடுகளை செய்வதும் மோடி அரசின் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் வேலை தான். 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் 8 பேர் கலந்து கொள்ளும் விளையாட்டுப் பிரிவில் பல்கலைக்கழக வீரர் - வீராங்க னைகள் பங்கேற்க கூட வாய்ப்பு ஏற்படுத்தா தது ஏன்? மோடி அரசு சரியாக அறிவிப்புகளை வெளியிடவில்லையா? வீரர் - வீராங்கனைக ளை அழைத்து வருவது மற்றும் பல்கலைக்கழ கத்தில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டதா? கேலோ இந்தியா போட்டி நிதி ஒதுக்கீட்டில் மோசடி நிகழ்ந்ததா? நிதியை செலவழிக்காமல் சூறை யாட குறைந்த வீரர் - வீராங்கனைகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதா? என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. திசை திருப்பக் கூறப்படும் காரணங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையா ட்டுப் போட்டியில் வீரர் - வீராங்கனைகள் பங் கேற்காததற்கு மைதானத்தில் தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் (நாடா) இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. நாடா அதிகாரி கள் இருந்ததால் பயத்தில் பங்கேற்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் விடுப்பு வழங்கப் படாதது மற்றும் மழை, குளிர்காலத்தில் தொடர் நடைபெற்றதால் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கவில்லை என இந்த பிரச்சனையை திசை திருப்ப பல்வேறு காரணங்கள் கூறப்படு கின்றன என விளையாட்டு வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.