தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எப்ஸ்டீன், நரவனே விவகாரங்களை விவாதிக்க மறுக்கும் மோடி அரசு!

9 Feb 2026, 3:02 pm
எப்ஸ்டீன், நரவனே விவகாரங்களை விவாதிக்க மறுக்கும் மோடி அரசு!
<p><strong>எப்ஸ்டீன், நரவனே விவகாரங்களை விவாதிக்க மறுக்கும் மோடி அரசு</strong></p> <p>மக்களவை நாள் முழுவதும் முடங்கியது புதுதில்லி, பிப். 9 - முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு மோடி அரசு அனுமதி மறுப்பதால் மக்களவை திங்களன்று நாள் முழுவதும் முடங்கியது. &nbsp;பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உட னான பிரதமர் மோடியின் தொடர்பு குறித்த செய்திகளும், இந்தியாவின் பாதுகாப்பில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. &nbsp;இந்திய விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களின் நலன்களுக்கு எதிராக, அமெரிக்காவுடன் அவசர கதி யில் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதே, எப்ஸ்டீன் விவகாரத்தி லிருந்து தப்பிக்கவும்தான் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. &nbsp;ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பதிலளிக்காமல் மூடி மறைக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இவை அனைத்தும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் என்பதால், மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவற்றுக்கு மோடி அரசு அனுமதி மறுத்து வருகிறது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 9-ஆவது நாளான திங்க ளன்றும், ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், மக்க ளவை நாள் முழுவதும் முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9-ஆவது நாளான திங்க ளன்று, மக்களவை காலை 11 &nbsp;மணிக்குக் கூடியபோது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேசு வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதனால், முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, 12 மணிக்குக் கூடியபோதும் போராட்டம் தொடர்ந்ததால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது, பட்ஜெட் குறித்து பேச காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிறிது நேரம் பேசிய சசி தரூர், தனது வாய்ப்பை ராகுல் காந்திக்கு வழங்கினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, அவையில் தான் பேசுவதற்கு சபாநாயகர் முத லில் ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டு, &nbsp;பின்னர் ஏனோ அனுமதி அளிக்க வில்லை என்றார். இதனை மறுத்த நாடா ளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அவையில் பேச ராகுல் காந்திக்கு சபாநாயகர் உறுதி எதுவும் அளிக்கவில்லை என்று கூறவே, &nbsp;மீண்டும் அமளி ஏற்பட்டு, நாள் &nbsp;முழுவதற்கும் அவை ஒத்திவைக்கப் பட்டது. இதனிடையே, &lsquo;இந்தியா&rsquo; கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் காலையில் நடைபெற்றது. அப்போது, 8 எம்.பி.க்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தது டன், ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது பற்றி &nbsp;ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.