தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பலமுனைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் மோடி அரசு - கே.பி.பெருமாள்

10 Jul 2026, 8:26 pm
பலமுனைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் மோடி அரசு - கே.பி.பெருமாள்

பலமுனைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் மோடி அரசு - கே.பி.பெருமாள்

பாஜக ஆட்சியில் அரசியலமைப்பு ஜன நாயகம், கூட்டாட்சி மற்றும் மதச் சார்பின்மை ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்ற அரசு நிறுவனங்களும் தன்னாட்சி அமைப்புகளும் பாஜக வின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்திய விதம், பீகார் சட்ட மன்றத் தேர்தலின் போது தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர மறுஆய்வு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களில் அதன் பெரும் தாக்கம் ஆகியவை இதற்குச் சான்றாகும். வாக்காளர்கள் மேல் முறையீடு செய்து, உரிய ஆவண ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பின்னரும் கூட,இந்திய தேர்தல் ஆணையம் “தர்க்க ரீதியான முரண்பாடுகள்” என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து கிட்டத்தட்ட 27 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) செயல்முறையின் மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள், அரசு சலுகைகளைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பாஜக அரசுகள் அறி வித்துள்ளன. சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) அடிப்படையில் மட்டும் 5 லட்சம் ரேஷன் அட்டைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகப் பீகார் அரசு தெரிவித்துள்ளது. ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக அரசு வேண்டுமென்றே இந்தச் செயல்முறையை மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்க அரசு சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களை வங்க தேச எல்லைக்குள் விரட்டுகிறது. மேலும், குடிசைப் பகுதிகளை இடிக்கவும், சிறுபான்மையினர் மற்றும் முற்போக்குக் குரல்களைத் தடுக்கவும், நில உச்ச வரம்புச் சட்டங்களை நீக்கவும் தொடங்கியுள்ளது.

விவசாயத்தைப் புறக்கணித்த ஒன்றிய பட்ஜெட் 2

026-27 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தனது உரையில் விவசாயத்தைப் பெருமளவில் புறக்கணித்தார். சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒரேயொரு முறை மட்டுமே குறிப்பிட்டார். அதே நேரத்தில், கிராமப்புற தொழிலாளர்கள் பற்றிய எந்தவொரு குறிப்பும் வெளிப்படையாக இல்லை. ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் விவசாயத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. பத்தாண்டு சராசரி வளர்ச்சி விகிதமான 4.45 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாக மட்டுமே இருந்தது.

இக்காலத்தில் பயிர் உற்பத்தி மிகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டது. இந்தச் சூழ்நிலையில், 2026-27ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒன்றிய அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், அந்த பட்ஜெட்டில் விவசாயி களுக்கு எந்த நிவாரணமும் தர அரசு தவறிவிட்டது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் ரூ. 1.40 லட்சம் கோடியாகும். இது 2025-26 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விடப் பெயரளவில் வெறும் 5.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. பணவீக்கத்துடன் கணக்கிட்டால், வேளாண்மைக்கான உண்மையான ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை என்பதையே இது குறிக்கிறது.

தானியங்கள், மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்க ளின் விளைச்சல் விகிதங்கள் உலக சராசரியை விடத் தொடர்ந்து பின்தங்கியுள்ளன என்றும், இது இந்திய உற்பத்தியைப் பொருளாதார ரீதியாக லாபமற்றதாக ஆக்குகிறது என்றும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பட்ஜெட்டில் உரங்களுக்கான மானியம் ரூ. 1,86,460 கோடியிலிருந்து (2025-26) ரூ. 1,70,781 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உணவு மானியமும் முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விடக் குறைந்துள்ளது. பட்ஜெட் உரை யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தோ அல்லது புதிதாக நிறைவேற்றப் பட்ட விபி ஜி ராம் ஜி திட்டம் குறித்தோ எந்தவொரு குறிப்பும் இல்லை. இது கிராமப்புற வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தை முற்றிலுமாகப் புறக்கணித்ததைக் காட்டுகிறது.

தீவிரமடையும் விவசாயத் தற்கொலைகள்

ஒன்றிய அரசின் கொள்கைகளால் விவசா யத்திற்கான இடுபொருட்களின் விலையைக் கட்டுக் கடங்காமல் உயர்த்தியதோடு, விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்கவும் தவறியுள்ளதால் விவசாய நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வரு கிறது. கடன் சுமை அதிகரித்து வருவதோடு விவசாயத் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளில் நிலவும் நிலைமையே இதற்கு மிகத் தெளிவான உதாரணமாகும். அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, மராத்வாடா பகுதியில் 2013 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் 26 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகி யுள்ளன. இது தினசரி 7 தற்கொலைகள் ஆகும். 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்தில் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளைச் சேர்ந்த 2,706 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பிற மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் கூடத் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய நெருக்கடி இருந்தபோதிலும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், பெருநிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தரும் கொள்கைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, கடந்த 28 ஆண்டுகால புள்ளி விவரப்படி 1990களின் நடுப்பகுதியிலிருந்து மகா ராஷ்டிர மற்றும் கர்நாடகத்தில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியை விட 2.5 மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. 1995 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 3.9 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்த நெருக்கடி உச்சத்தை அடைந்தது. புலம் பெயர்ந்த தொழிலா ளர்களின் தற்கொலை குறித்த விவரங்களை வெறும் 12 மாநிலங்களே வழங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தற்கொலைகள் 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போது இறக்குமதி வரிக்குறைப்பு, உரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி, அத்துடன் விலை உயர்வு ஆகியவற்றால் அரசாங்கம் உரு வாக்கியுள்ள நெருக்கடியின் பின்னணியில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தற்கொலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கார்ப்பரேட்டுகளின் கைகளில் தேசத்தின் செல்வம்

நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் பெரும் பணக்காரர்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்கும் இடையிலான பொரு ளாதார ஏற்றத்தாழ்வு பெருமளவு அதிகரித்துள்ளது. ஆக்ஸ்பாம் (Oxfam) அறிக்கையின்படி, பெரும் பணக்காரர்களான 1 சதவீதம் பேர் நாட்டின் 40 சதவீத செல்வத்தையும், முதல் 10 சதவீதம் பேர் 60 சதவீத தேசிய வருமானத்தையும் தங்களின் கட்டுப் பாட்டில் கொண்டுள்ளனர். கீழ்மட்டத்திலுள்ள 50 சதவீதம் பேர் வெறும் 15 சதவீத தேசிய வருமா னத்தில் பிழைப்பு நடத்துகின்றனர். பெருந்தொற்று காலத்தில் கூட, ஊரடங்கின் போது இந்தியக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரித்தது. 2019இல் இந்தியாவின் கோடீஸ்வரர்க ளின் மொத்த சொத்து சுமார் ரூ. 31 லட்சம் கோடியாக இருந்தது; அதுவே 2025க்குள் ரூ. 88 லட்சம் கோடியாக அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது.

பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் பரம ஏழை களாகவும் மாறியுள்ளனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தற்கொலைகள் இக்காலத்தில் அதிகரித்துள்ளன. விவசாய நெருக்கடிகள் தீவிரம டைந்துள்ளன. உணவுப் பொருள் உற்பத்தி உலக சராசரியை விடக் குறைந்துள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற பெயரில் (எஸ்.ஐ.ஆர்) உண்மையான வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பாஜக அரசு பறித்து வருகிறது.

இதன் மூலம் குறுக்கு வழியில் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கிற ஆயுதமாக இதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இவைகளுக்கு எதிராக மிக வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே, விவசா யிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் என உழைக்கும் மக்கள் அனை வரும் ஒன்று திரள வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.