தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராமப்புற வேலை திட்டத்தை அழிக்க துடிக்கும் மோடி அரசு

24 Dec 2025, 4:16 pm
கிராமப்புற வேலை திட்டத்தை அழிக்க துடிக்கும் மோடி அரசு
<p><strong>கிராமப்புற வேலை திட்டத்தை அழிக்க துடிக்கும் மோடி அரசு</strong></p> <p>கோவை, டிச.24- கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கத்துடிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தமிழகம் முழு வதும் மதச்சார்பற்ற முற்போக்கு &nbsp;கூட்ட ணிக் கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கிராமப்புற மக்களின் வாழ்வாதா ரத்தையும், நாட்டின் பொருளாதார சுழற் சிக்கும் பெரும் பங்காற்றி வரும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் &nbsp;திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு விக்சித் பாரத் - உத்தரவா தம் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் மசோதாவை கொண்டுவந்துள்ளது. &nbsp;இதன்மூலம் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுத்தி, திட் டத்தை செயலிழக்கச் செய்யும் நோக் கில் ஒன்றிய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பு மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணிக்கட்சிகளின் சார்பில் &nbsp;ஆர்ப்பாட்டங்கள் புதனன்று நடைபெற் றது. கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி &nbsp;ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி &nbsp;முருகேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெங்கட பதி, மதிமுக சூ.பே. கருணாநிதி, விசிக &nbsp;உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிக ளின் தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர். காரமடை, பொள்ளாச்சி, அன்னூர், &nbsp;ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல் தான் பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங் களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, வி.ஆர்.பழனிச்சாமி, கே.மனோகரன், கனகராஜ், ஒன்றியம் &nbsp;மற்றும் தாலுகா செயலாளர்கள் மணி கண்டன் (அன்னூர்), கனகராஜ் (மேட்டுப் பாளையம்), மூ.அன்பரசன் (பொள் ளாச்சி), அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.துரைசாமி, மாவட்டப் பொரு ளாளர் கே.மகாலிங்கம் மற்றும் திமுக மாநில மாணவரணி செயலாளர் &nbsp;ராஜிவ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து &nbsp;கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி &nbsp;பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் &nbsp;செ.முத்து கண்ணன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் &nbsp;செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் பலர் &nbsp;கலந்து கொண்டனர். பள்ளிபாளையத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பி.மாரியப்பன் கண்டன உரையாற்றினார். இதில், பலர் &nbsp;கலந்து கொண்டனர். ராசிபுரம், நாமக் கல், மல்லசமுத்திரம், பரமத்தி வேலூர், &nbsp;எலச்சிபாளையம், திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி, சேந்த மங்கலம், வெண்ணந்தூர், திருச் செங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் நடைபெற்ற ஆர்ப்பட்டங்களில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், ந. வேலுச்சாமி, கி.தங்கமணி, எஸ்.தமிழ் மணி, சு.சுரேஷ், ஏ.டி.கண்ணன், எம். கணேச பாண்டியன் மற்றும் மாவட்ட &nbsp;குழு உறுப்பினர்கள், திமுக மேற்கு &nbsp;மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, &nbsp;சிபிஎம் மூத்த தோழர் ஏ.ஆதிநாரா யணன் சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் (புதுச்சத்திரம்) எஸ்.பெரியசாமி, (ராசி புரம்) அறிவுடை நம்பி, (பள்ளிபாளை யம்) லட்சுமணன், சபாபதி (நாமகிரி பேட்டை) உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். தருமபுரி தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு திமுக நகரச் செயலாளர் நாட்டான் மாது தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, சிபிஐ &nbsp;முன்னாள் செயலாளர் எஸ்.தேவராசன், &nbsp;திமுக மாவட்ட அவைத் தலைவர் மனோ கரன், நகரச் செயலாளர் கெளதம், காங் கிரஸ் மாவட்டத் தலைவர் தீர்த்தராமன், &nbsp;விசிக மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன், திக மாநில அமைப்பு செய லாளர் ஊமை,.ஜெயராமன், முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் &nbsp;என்.சுபேதார், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் சிராஜுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பென்னாகரத்தில் திமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் பி.என்.பி.இன்பசேகரன், நல்லம் பள்ளியில் திமுக சட்டமன்ற உறுப்பி னர் பெ.சுப்பிரமணி ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.மாதன், சோ.அருச் சுணன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆர்.ஜோதிபாசு, கே.கோவிந்தசாமி, ஜி. சக்திவேல், ஆ.ஜீவானந்தம், ஆர்.சக்தி வேல், எஸ்எஸ்.சின்னராஜ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து &nbsp;கொண்டனர். ஈரோடு ஈரோடு காளை மாட்டு சிலை அருகே &nbsp;நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மூத்த தோழர் கே.துரைராஜ் தலைமை &nbsp;வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரராஜன், எஸ். சுப்ரமணியன், திமுக செயலாளர் மு. சுப்ரமணியன், சிபிஐ தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன், மதிமுக &nbsp;ஜெயக்குமார், சிபிஐ(எம்எல்) லிபரே சன் ஜெ.பி.கார்த்திகேயன் உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர். காளிங்கராயன் பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு திமுக நிர்வாகி தோ.சதாசி வம் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு வீ.அமிர்தலிங்கம் சிறப் புரையாற்றினார். திமுக அ.செந்தில் குமார், விசிக சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நம்பியூரில் திமுக &nbsp;நிர்வாகி செந்தில்குமார், மொடக் குறிச்சியில் திமுக ஒன்றியச் செயலா ளர் குணசேகரன் ஆகியோர் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் &nbsp;திமுக எம்.பி., கே.இ.பிரகாஷ், சிபிஎம் &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வி.மாரிமுத்து, கே.ஆர்.விஜயராக வன், இடைக்குழு செயலாளர் வி. பாண்டியன், சிபிஐ நிர்வாகிகள் ஸ்டாலின், சக்திவேல், காங்கிரஸ் நிர் வாகிகள் எஸ்.பி.சரவணன், ஆர்.எம். பழனிசாமி, மதிமுக நிர்வாகி செல்வ ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நீலகிரி நீலகிரி மாவட்டம், சேரம்பாடி பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக நிர்வாகி ஆர்.பி.பரமேஸ்குமார் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் &nbsp;மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ராஜன் மற்றும் &nbsp;விசிக துணைச்செயலாளர் சகாதேவன், &nbsp;நிர்வாகி மகேஷ், திமுக நிர்வாகிகள் க. ராஜன், கோபாலகிருஷ்ணன், பாக்கிய நாதன், ஐயுஎம்எல் நிர்வாகி செய்யது அலவி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.