தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் குறித்த விவாதத்திற்கும் அஞ்சும் மோடி அரசு ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் வெளிநடப்பு

10 Mar 2026, 3:25 pm
எஸ்ஐஆர் குறித்த விவாதத்திற்கும் அஞ்சும் மோடி அரசு ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் வெளிநடப்பு
<p><strong>எஸ்ஐஆர் குறித்த விவாதத்திற்கும் அஞ்சும் மோடி அரசு&nbsp;&lsquo;இந்தியா&rsquo; கூட்டணி எம்.பி.,க்கள் வெளிநடப்பு</strong></p> <p>புதுதில்லி செவ்வாயன்று மாநிலங்களவை யில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியல் &nbsp;(எஸ்ஐஆர்) நடைமுறை குறித்து எதிர்க்கட்சி எம்.பி. க்கள், கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, &ldquo;எஸ்ஐஆர் நடைமுறை ஒரு மோசடி ஆகும். சில மாநிலங்களில் குறிப்பிட்ட வாக்காளர்களை நீக்க இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது&rdquo; எனக் கூறினார். &nbsp;உடனே இடைமறித்த மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், &ldquo;இத்தகைய வார்த்தைகளை அனுமதிக்க முடியாது. தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் கடந்த கூட்டத் தொடரிலேயே முடிந்துவிட்டது. அப்போது அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச போதிய நேரம் வழங்கப்பட்டது. எனவே, இப்போது மீண்டும் இதைப் பற்றிப் பேசுவது முறையல்ல&rdquo; என்று கூறினார். அவைத் தலைவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் (இந்தியா கூட்டணி) அவையின் நடுப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். உடனே அவைத் தலைவர், &ldquo;அவைக்குள் பதாகைகளைக் காண்பிக்க அனுமதியில்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அவையின் தலைவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட ஒரு விஷயத்தை மீண்டும் கிளப்புவது சரியாக இருக்காது&rdquo; என்று சி.பி. ராதா கிருஷ்ணன் கூறினார். அவைத் தலைவ ரின் விளக்கத்தால் அதிருப்தி அடைந்த &nbsp;இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் மாநிலங் களவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். திங்களன்று மாநிலங்களவையில் மேற்கு ஆசிய போர் குறித்து விவாதிக்க மறுத்த மோடி அரசு, செவ்வாயன்று எஸ்ஐஆர் குறித்த விவாதத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.