அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்தது மோடி அரசு சமையல் எரிவாயு வாங்க இந்தியா ஒப்பந்தம்
18 Nov 2025, 2:35 pm
<p><strong>அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்தது மோடி அரசு சமையல் எரிவாயு வாங்க இந்தியா ஒப்பந்தம்</strong></p>
<p>புதுதில்லி அமெரிக்காவிலிருந்து சுமார் 2.2 மில்லியன் டன் திரவ பெட்ரோலிய வாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந் தத்தில் இந்தியா கையெழுத் திட்டுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அப ராத வரிகளுடன் சுமார் 50 சதவிகித வரியை அமெரிக்காவிதித்தது. மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என தொடர்ந்து மிரட்டி வந்தது. இந்நிலையில், ரஷ்யா தவிர பிற நாடுகளிடம் இருந்தும் நாங்கள் எண்ணெய் வாங்கி வருகிறோம். தேவைக்கு ஏற்ற வகையில் கூடுத லாகவும் வாங்கப்படும் என இந்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் தரப்பில் கூறப்பட்டது. மேலும் அமெ ரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் எரிப்பொருட்களின் அளவும் அதிகரிக்கப்படும் என இந்திய தரப்பில் கூறப்பட்டது. ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் மூலமாக பல கோடி ரூபாய் லாபம் பார்க்கும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன மும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய அரசின் அறிவுறுத்தலின் படி குறைக்க உள்ளதாக அறிவித்தது. இந்த சூழலில் இந்தியாவிற்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரு ரஷ்யா எண்ணெய் நிறுவனங்களின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து மிரட்டியது. இந்நிலையில் தான் தற்போது இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் , ஹிந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் ஆகியவை அமெ ரிக்காவிடம் இருந்து திரவ எரிவாயுவை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, 2026-ஆம் ஆண்டில் அமெரிக்க வளை குடாப் பகுதியில் இருந்து 2.2 மில்லி யன் டன் திரவ பெட்ரோலிய வாயுவை (சமையல் எரிவாயு) இந்தியா இறக்குமதி செய்யும். இது இந்தியா வின் சமையல் எரிவாயு இறக்கு மதியில் சுமார் 10 சதவிகிதமாகும். இந்தியா உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி சந்தைகளில் ஒன்றாக உள்ள நிலையில் அதனை அமெ ரிக்காவுக்குத் திறந்து விட்டுள்ளது மோடியின் பாஜக அரசு.</p>
