தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளுக்கு கூடுதல் தொகை தருவதைத் தடுக்கும் மோடி அரசு; துணை போகும் எடப்பாடி

12 Apr 2026, 5:30 am
விவசாயிகளுக்கு கூடுதல் தொகை தருவதைத் தடுக்கும் மோடி அரசு; துணை போகும் எடப்பாடி
<p><strong>விவசாயிகளுக்கு கூடுதல் தொகை தருவதைத் தடுக்கும் மோடி அரசு; துணை போகும் எடப்பாடி</strong></p><p>தஞ்சாவூர், ஏப். 11- அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் நம்பி நான் அரசியலுக்கு வரவில்லை, உழைப்பை மட்டுமே நம்பி வந்திருக் கிறேன் என்றும், வரும் தேர்தலில் 2021-ஐ விட அதிக தொகுதிகளில் வென்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழங்கியுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், எடப்பாடி பழனி சாமியின் ஆணவப் பேச்சுக்குக் கடும் பதிலடி கொடுத்தார். விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணில் உரையாற்றிய முதலமைச்சர், விவசாயிகளின் நலனில் ஒன்றிய அரசு காட்டும் பாராமுகத்தைச் சாடினார். “நெல் கொள்முதலுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசு உத்தர விடுகிறது. மாநில அரசு தனது சொந்தப் பணத்தில் விவசாயிகளுக்குக் கூடுதல் தொகை வழங்குவதைக் கூடத் தடுக்கும் இந்த ‘ஓனர்’ புத்தியைக் கேள்வி கேட்கப் பழனிசாமிக்குத் தைரியம் இருக்கிறதா? விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்த பா.ஜ.க.-விடம் மண்டியிட்டுக் கிடப்பதுதான் அவரது சாதனை. டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது முதல், குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே மேட்டூர் அணையைத் திறந்தது வரை அனைத்தும் திமுக அரசு செய்த சாதனை கள்,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். பழனிசாமியின் ஆணவத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் எடப்பாடி பழனிசாமியின் தரக்குறை வான விமர்சனங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், “ஸ்டாலின் அதிர்ஷ்டத்தில் முதலமைச்சர் ஆகிவிட்டார் என்று பழனி சாமி பேசி வருகிறார். நான் ஐம்பது ஆண்டு கால உழைப்பால், படிப்படியாக உயர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஆனால், பழனிசாமி எப்படி முதல்வர் ஆனார் என்பது நாட்டுக்கே தெரியும். சசி கலாவின் காலில் விழுந்து, ஊர்ந்து போய் முதல்வர் நாற்காலியைப் பிடித்த பழனி சாமிக்கு, மக்கள் செல்வாக்கைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. அவர் போட்ட கூவத்தூர் ஆட்டத்தையும், மக்கள் விரோத ஆட்சியையும் தமிழகம் மறக்காது. திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு களும், தி.மு.க.-வும் இருக்கும் வரை பழனிசாமியின் பகற்கனவு பலிக்காது. அவரது ஆணவப் பேச்சுக்கு மக்கள் ஏப்ரல் 23-இல் முற்றுப்புள்ளி வைப்பார்கள்,” என்று சாடினார். பா.ஜ.க. - அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி பா.ஜ.க.வுடனான அ.தி.மு.க.வின் உறவு குறித்துச் சாடிய முதலமைச்சர், “பா.ஜ.க.வும் - அ.தி.மு.க.வும் தனிதனி யாக வந்தாலும் கூட்டணியாக வந்தாலும் வேறு வேறு இல்லையென்று தமிழ்நாட்டு மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். திமுக அரசின் சாதனைப் பட்டியலை விட நீளமானது பழனிசாமியின் துரோகப் பட்டி யல். மாநில உரிமைகளை ஒவ்வொன் றாக தில்லியிடம் அடகு வைத்துவிட்டு, இப்போது ஏதோ போராளி போல வேடம் போடுகிறார். நீட் தேர்வு முதல் ஜி.எஸ்.டி வரை அனைத்திற்கும் வழிவகுத்த பழனி சாமிக்குத் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றிப் பேச உரிமையில்லை,” என்றார். தஞ்சை மாவட்ட வெற்றி வேட்பாளர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டியி டும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு முதலமைச்சர் வேண்டு கோள் விடுத்தார்: திருவிடைமருதூர் தொகுதியில் கோவி. செழியன், திருவையாறு தொகுதி யில் துரை. சந்திரசேகரன், கும்பகோணம் தொகுதியில் சாக்கோட்டை அன்பழகன், ஒரத்தநாடு தொகுதியில் ஆர். வைத்தி லிங்கம், பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாத்துரை, பேராவூரணி தொகுதி யில் அசோக்குமார், தஞ்சாவூர் தொகுதி யில் சண். ராமநாதன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தினார். பாபநாசம் தொகுதியில் இந்திய யூனி யன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜ கான் அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.