தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா - இஸ்ரேலின் சட்டவிரோதப் போர் மோடி அரசின் அணுகுமுறை அவமானகரமானது! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

6 Mar 2026, 3:17 pm
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா - இஸ்ரேலின் சட்டவிரோதப் போர்  மோடி அரசின் அணுகுமுறை அவமானகரமானது! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா - இஸ்ரேலின் சட்டவிரோதப் போர்  மோடி அரசின் அணுகுமுறை அவமானகரமானது! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

புதுதில்லி, மார்ச் 6 - ஈரானுக்கு எதிராக, அமெரிக்கா - இஸ்ரேல் ஏகாதிபத்திய போரை நடத்தி வரும் நிலையில், இந்த பிரச்சனையில், மோடி அரசு மேற்கொண்டுள்ள அணுகு முறை அவமானகரமானதாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பலவீனப்படுத்தப்படும் அணிசேரா மரபு ஈரானுக்கு எதிராக அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணி கட்டவிழ்த்து விட்டுள்ள சட்டவிரோதப் போர் விவ காரத்தில், ஒன்றிய அரசு மேற்கொண்டு ள்ள அவமானகரமான அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  ஒன்றிய அரசின் மவுனம், செயலற்ற தன்மை, இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை சிதைப்ப தோடு, நாட்டின் நீண்டகால ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் அணிசேரா மரபையும் பலவீனப்படுத்துகிறது.

ஈரானுக்கு எதிரான கொடூரமான போரானது, மேற்கு ஆசியாவைத் தாண்டி, நமது அண்டை நாடு உட்பட உலகின் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. இலங்கையின் துணிச்சல் மோடி அரசுக்கு இல்லை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோக்கள் எனப்படும் நீர்மூழ்கிக் குண்டுகளால், ஈரானிய கடற்படைக் கப்பலான ‘ஐஆர்ஐ எஸ் டெனா’ (IRIS Dena) இந்தியப் பெருங் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. விசாகப்ப ட்டினத்தில் ஒரு கூட்டு கடற்படைப் பயிற்சி யிலிருந்து அந்தக் கப்பல் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்தக் கப்பல் பாதுகாப்பாக வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு இந்தியா தவறிவிட்டது. ஆனால், ஈரானின் இரண்டாவது கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் புஷேர்’ (IRIS Bushehr)-இன், 208 பணியாளர்களையும் மீட்டு, திருகோணமலையில் பாதுகாப் பாக தங்குவதற்கு இலங்கை பொறுப் பேற்றுள்ளது. இது, இந்தியாவிற்கு அவமானகரமானது. அமெரிக்காவின் காலடியில் இந்திய வெளியுறவுக் கொள்கை சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி யான, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளால், தெற்காசியாவில் முன்னணி நாடு என்ற தனது அந்தஸ்தை இந்தியா வீணடித்திருப்பது உலகின் கூர்மையான கவனத்திற்கு வந்துள்ளது.

போருக்கு முந்தைய நாள், இஸ்ரேலுக்கு பிரதமர் மேற்கொண்ட விஜ யத்தில், இந்திய வெளியுறவுக் கொள்கை யின் முழுமையான சரணடைவு பிரதி பலித்தது. சர்வதேச நீதிமன்றத் தால் தீர்ப்பளிக்கப்பட்ட போர்க்குற்ற வாளியான நேதன்யாகுவை மோடி அர வணைத்தது இழிவானது, இந்திய அர சாங்கத்தின் நடுநிலைமை மற்றும் அதன் சுதந்திரமான தன்மை அனைத்தையும் அழித்து விட்டது. காமேனியின் கொலையை கூட கண்டிக்க துணிச்சல் இல்லை கடந்த காலங்களில், இந்தியா எப்போதும் நாடுகளின் அமைதி மற்றும் இறையாண்மைக்காக நின்றுள்ளது. தற்போதைய ஒன்றிய அரசு, அலி காமேனி உட்பட ஈரானிய உயர்மட்டத் தலைவர்களின் இலக்கு வைக்கப்பட்ட கொலையைக் கண்டிக்கக்கூடத் தவறி விட்டது வெட்கக்கேடானது. இதற்கிடையில், எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்காக ஹார்முஸ்  ஜலசந்தியை ஈரான் மூடுவது இந்தியா வின் எரிசக்தி பாதுகாப்பில் கடுமையான நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும். ஆனால், ஏதோ பெருந்தன்மையை வெளிப்படுத்துவது போல், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் அவரது நிர்வாகமும் ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

மோடி அரசால் ஏற்பட்ட  தேசிய அவமானம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல, சீனாவுக்கு வழங்கப் பட்டதைப் போன்ற சலுகைகள் இந்தியா வுக்கு ஒருபோதும் வழங்கப்படாது என்று ஓர் அமெரிக்க அதிகாரி வெளிப்படை யாகக் கூறியுள்ளார். மேலும் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமெரி க்காவிற்கு சாதகமாகத்தான் உருவாக்கப் பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு, இந்த  அளவிற்கு மிகப்பெரிய தேசிய அவ மானத்தை நாடு சந்தித்ததில்லை. இந்த நிலைமையைச் சரிசெய்யவும், அமை தியை மீட்டெடுக்கவும், நமது தேசிய சுய மரியாதையை மீட்டெடுக்கவும், போரை உடனடியாக நிறுத்த மோடி அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. மேற்கு ஆசியா முழுவதும் சிதறிக்கிட க்கும் இந்தியாவின் ஒரு கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாது காப்பை உறுதி செய்வதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசியல் தலைமைக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.