தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை ஏற்க முடியாது! விருதுநகரில் சிஐடியு போராட்டம்

28 Nov 2025, 2:28 pm
மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை ஏற்க முடியாது!  விருதுநகரில் சிஐடியு போராட்டம்
<p><strong>மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை ஏற்க முடியாது! &nbsp;விருதுநகரில் சிஐடியு போராட்டம்</strong></p> <p>விருதுநகர், நவ.,28- ஒன்றிய பாஜக அர சானது, தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி வெறும் &nbsp; 4 &nbsp; தொகுப்புகளாக மாற்றியுள்ளதை கண்டித்து சிஐடியு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். &nbsp; இதனால், சுதந்திர இந்தி யாவில் போராடிப் பெறப் பட்ட 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யப் பட்டுள்ளது. &nbsp;இது தொழி லாளர் சீர்திருத்தம் என்ற பேரில் கார்ப்பரேட் நிறுவ னங்களுக்குச் சேவகம் செய்யும் செயலாகும். எனவே, &nbsp;இதனைக் கண்டி த்தும் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தியும் &nbsp;விருதுநகர் நகராட்சி அலு வலகம் முன்பு &nbsp;சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு &nbsp;ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.விஜயபாண்டி தலை மையேற்றார். நகர கன்வீனர் வி.பாலமுருகன் முன்னிலை வகித்தார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பால சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். &nbsp;இதில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆ.குருசாமி, &nbsp;நகர செயலாளர் &nbsp;எம்.ஜெயபாரத், கே.பாலமுருகன், பாண்டி, &nbsp;பழனி,செல்வம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.