தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” மோடியின் அறிவுறுத்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

11 May 2026, 10:13 pm
“ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” மோடியின் அறிவுறுத்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

“ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” மோடியின் அறிவுறுத்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுதில்லி தெலுங்கானாவில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிர தமர் மோடி, ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல சிக்கன நட வடிக்கைகளை மக்கள் கடைப் பிடிக்க வேண்டும் என கூறி யிருப்பதை எதிர்க்கட்சிகள் கடு மையாக விமர்சித்துள்ளன.

மேற்கு ஆசியப் போர்ச் சூழ லால் இந்தியா உட்பட உலக நாடு கள் பெரும் பொருளாதார நெருக்க டியை எதிர்கொண்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா காலத்தைப் போன்ற கட்டுப்பாடு களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

பெட்ரோல் டீசலை சிக்க னமாகப் பயன்படுத்த வேண்டும். தங்கம் வாங்குவதையும், வெளி நாடுகளுக்கு செல்வதையும் ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி யுள்ளார்.

மேலும் இயன்றவரை வீட்டி லிருந்தே பணிபுரிய வேண்டும் (Work from home).

அந்நியச் செலாவணியைச் சேமிக்க உள் நாட்டுப் பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது பேச் சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு அவ ரது “அலட்சியத்தை” காட்டுகிறது.

பல நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணம் செல்லும் அவர் தனது பய ணத் திட்டங்களை நிறுத்தாமல் நாட்டு மக்களை வெளி நாடு களுக்கு செல்லாதீர்கள் என்கிறார் என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

ஐந்து மாநிலங்கள்/யூனியன் பிரதேச தேர்தல் முடிவடைந்த உட னேயே மோடி இந்த வேண்டு கோளை விடுத்துள்ளார்.

இது அவ ரது தலைமையிலான பாஜக அர சின் மோசமான நிர்வாகத்தின் வெளிப்பாடு.

பாஜக தலைமை யிலான 12 ஆண்டுகளில் மக்கள் எதை வாங்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று சொல் லும் அளவிற்கு நிலைமை மோச மாகியுள்ளது.

நாட்டை இப்படி ஒரு மோசமான நிலைக்கு அவர் கொண்டு வந்துள்ளார். அவர்கள் நிதி மேலாண்மையில் தோல்வி யுற்றுள்ளனர், குறிப்பாக ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் போரின் விளைவாக சர்வதேச அளவில் எழுந்துள்ள நெருக்கடி யின் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அவர் களால் சமாளிக்க முடியவில்லை என்பதன் வெளிப்பாடு தான் இது.

இச்சூழலில் பிரதமர் மோடி இந்த பொருளாதாரச் சுமையை குடிமக்கள் மீது சுமத்துகிறார் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

மோடியால் உருவாக்கப்பட்ட பேரிடர் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பேரிடர் மோடியால் உரு வாக்கப்பட்டது .

கொரோனா காலத்தில் அவர் எப்படி மந்தமாக இருந்தாரோ, அதேபோல் இப்போ தும் செய்துள்ளார். முழுச் சுமை யையும் மக்கள் மீது போட்டுவிட்டு, அவர் மட்டும் அங்கேயும் இங்கே யும் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று சாடியுள்ளது.

அகிலேஷின் கேள்வி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல்கள் முடிந்த பிறகுதான் பிரதமருக்கு இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் நினைவுக்கு வந்ததா? பாஜக தலைவர்கள் தேர்தலுக்கா கப் பயன்படுத்திய விமானங்கள் என்ன தண்ணீரிலா பறந்தன? பாஜக ஏன் வீடியோ கான்ப ரன்சிங் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை? இந்த கட்டுப்பாடு கள் அனைத்தும் பொதுமக்க ளுக்கு மட்டும்தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இத்தகைய வேண்டுகோள் மக்க ளிடையேயும் வணிக வர்த்தகத்தி லும் தேவையற்ற அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.