முந்தய பக்கம்

மோடி தொகுதியில் மசூதியை இடிக்க நோட்டீஸ்

18 Jun 2026, 9:03 pm
மோடி தொகுதியில் மசூதியை இடிக்க நோட்டீஸ்
<p><strong>மோடி தொகுதியில் மசூதியை இடிக்க நோட்டீஸ்</strong></p><p>மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் மசூதிக்குள் போலியான கார ணங்களை கூறி இந்து மத சின்னங்க ளை தேடுவது, வரலாற்றை திரித்து கூறி மசூதிகளை இடிப்பது, முகலாயர் கால பெயர்களை மாற்றுவது போன்ற செயல்கள் தான் அதிகம் அரங்கேறு கிறது. இதுபோன்ற செயல்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் டாப் ஆர்டரில் உள்ளன. </p><p>இந்நிலையில், பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்ச் ஷாஹிதா மசூதியை இடிக்க ரயில்வே துறை மூலம் மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. 1991ஆம் ஆண்டின் சிவில் வழக்கு ஆகஸ்ட் 2024இல் தள்ளு படி செய்யப்பட்டதால், ரயில்வே நிலத் தில் உள்ள மசூதியை இடிக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மசூதி நிர்வாகமான ‘அஞ்சுமன் இன்டிஜாமியா மசாஜித்’ இந்த நோட்டீஸ் தவறானது என்று மறுத் துள்ளது. ரயில்வே குறிப்பிட்ட மசூதி யின் கிழக்கு பகுதியில் உள்ள நிலம் தொடர்பானது. மசூதியின் உரிமை யோடு அதற்குத் தொடர்பில்லை என்று மசூதி நிர்வாகம் கூறியுள்ளது. அதே போல நோட்டீஸின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக உள்ளது. வெற்று காகிதத்தில் தட்டச்சு செய் யப்பட்ட இந்த நோட்டீஸில் தேதி, அதிகா ரப்பூர்வ முத்திரை அல்லது அதிகாரி களின் கையெழுத்து எதுவும் இல்லை. திடீரென கஞ்ச் ஷாஹிதா மசூதியை இடிக்க மோடி அரசு நோட்டீஸ் ஒட்டி யுள்ளதால் வாரணாசியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram