தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடியின் சிக்கன நடவடிக்கை திட்டம் அரசியல் - பொருளாதாரக் கொள்கைத் தோல்வியின் ஒப்புதல் - டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக்

22 May 2026, 8:55 pm
மோடியின் சிக்கன நடவடிக்கை திட்டம் அரசியல் - பொருளாதாரக் கொள்கைத் தோல்வியின் ஒப்புதல் - டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக்

மோடியின் சிக்கன நடவடிக்கை திட்டம் அரசியல் - பொருளாதாரக் கொள்கைத் தோல்வியின் ஒப்புதல் - டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக்

பொருளாதாரத்தை நிலைப்படுத்துவ தற்காக நுகர்வைக் குறைக்க வும், பயணங்களைக் கட்டுப் படுத்தவும் குடிமக்களுக்கு ஓர் அரசாங்கம் அறிவுறுத்து கிறது என்றால், அது வெறும் ‘சிக்கன’ நடவடிக்கையை மட்டும் பரிந்துரைக்கவில்லை; மாறாக, பொருளாதார அமைப்பின் ஆழமான கட்டமைப்பு பலவீனங்களை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது. 1991-ஆம் ஆண்டின் கடுமையான நெருக்கடியின் போது கூட, இதுபோன்ற இக்கட்டான வேண்டுகோள்கள் விடுக்கப் படவில்லை. விருப்பச் செலவுகளைக் குறைக்கவும், இயன்றவரை வீட்டிலிருந்தே பணியாற்றவும், இறக்கு மதிப் பொருட்களைத் தவிர்க்கவும் குடிமக்களை வலி யுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் விடுத்த பொது வேண்டுகோள்கள், அரசு இயந்திரத்திற்குள் இருக்கும் பெரிய அளவிலான பொருளாதார கவலைக ளையே சுட்டிக்காட்டுகின்றன. மோசமடைந்து வரும் உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், உள் நாட்டுத் தேவையை முன்கூட்டியே கையாள்வதற்கான முயற்சியாகவே பிரதமரின் இந்தத் தலையீடு அமைந்துள்ளது.

உருவாகும் பொருளாதார மந்தநிலை அழுத்தங்கள்

சர்வதேச பொருளாதாரச் சூழல் கடுமையான - நிலைத்தன்மையற்ற நிலையில் நீடிக்கிறது. மேற்கு ஆசியாவின் புவிசார் அரசியல் மோதல்கள், உலக ளாவிய வர்த்தக மந்தநிலை, சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொடர்ச்சியான எரிசக்தி விலை வாசி உயர்வு ஆகியவை உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

பன்னாட்டு நாணய நிதியம் (ஐஎம்எப்) 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 3.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஈரான் மீதான போர் நீடித்தால், உலகளாவிய வளர்ச்சி 2 சதவீதமாகச் சரிந்து, பல நாடுகள் முழுமையான பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்படுவது தவிர்க்க முடியாத தாகிவிடும். இந்தத் தாக்கங்களிலிருந்து இந்தியாவும் தனித்துவிடப்படவில்லை. எனவே, சிக்கன நடவ டிக்கைகளை ஊக்குவிக்கும் கொள்கை விவாதங்கள், ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் உள்நாட்டு நுகர்வுத் தேவையை மேலும் சுருக்கும்.

பிரதமரின் உரை பெரிய அளவிலான பொருளா தார அழுத்தத்தின் அறிகுறி என்று நிதிச் சந்தைகள் கருதியதால், சந்தையில் ஏற்ற இறக்கம் தீவிரமடைந்து முதலீட்டாளர்களின் செல்வத்தில் சுமார் ₹6.5 லட்சம் கோடி மிகக் குறுகிய காலத்தில் அழிந்தது. இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக ₹95.5 என்ற எல்லையைத் தாண்டி பெரும் சரிவைச் சந்தித்தது. இவை வெறும் சந்தை மாற்றங்கள் அல்ல—வர விருக்கும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பக் காட்சிகளாகவும் இருக்கலாம்.

மக்களிடம் ‘தியாகங்களைக்’ கோருவதற்குப் பதி லாக, பெட்ரோலியப் பொருட்கள் மீதான அதிகப்படி யான வரிகளைக் குறைத்து விலைவாசி உயர்வை அரசு தடுத்திருக்க வேண்டும். ஆனால், அரசாங்கமோ அண்மையில் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி யுள்ளது. அடுத்த கட்டத் தாக்குதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளின் மீதுதான் விழும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

பணவீக்கம், எரிசக்திச் சார்பு மற்றும் கொள்கை முரண்பாடுகள்

இந்தியாவின் பொருளாதார பலவீனம், இறக்கு மதி கச்சா எண்ணெய்யைச் சார்ந்திருக்கும் அதன் கட்ட மைப்போடு தொடர்புடையது. எண்ணெய் விலை ஒவ்வொரு 10 டாலர் அதிகரிக்கும் போதும், இந்தியா வின் இறக்குமதிச் சுமை 15 பில்லியன் டாலர் அதி கரிப்பதுடன், ரூபாயின் மதிப்பின் மீதும் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோலியப் பொருட்கள் மீதான தற்காலிக வரிக் குறைப்புகள் அல்லது பாதுகாப்பு இருப்புகளைப் பயன்படுத்தி நுகர் வோரைப் பாதுகாத்திருக்க வேண்டும். மாறாக, ஒன்றிய அரசு எரிபொருள் மீதான மறைமுக வரிகளை அதிகரிப்பதோடு, சமையல் எரிவாயு விலையை யும் உயர்த்தியுள்ளது. எரிபொருள் வரிவிதிப்பு அர சாங்க வருவாயின் முதன்மை ஆதாரமாக மாறியுள் ளது. பணவீக்கக் காலங்களில் மறைமுக வரிகளை அதிகமாகச் சார்ந்திருப்பது கீழ் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் வாங்கும் திறனைக் குறைத்து, நுகர்வு மற்றும் கிராக்கியை முடக்குகிறது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை

அண்மைக்கால கொள்கை நடவடிக்கைகளுக்குப் பின்னுள்ள முக்கியக் கவலை, அதிகரித்து வரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகும். கச்சா எண்ணெய், தங்கம், எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதியால் ஏற்படும் இந்தியாவின் தொடர்ச்சியான வர்த்தகச் சமநிலை யின்மை, வெளிநாட்டு வர்த்தகத் துறையை அழுத்தத் திற்குள்ளாக்குகிறது. தற்போது, நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதமாக உள்ளது. இது 3 சதவீதத்தைத் தாண்டும் போது முதலீட்டாளர்களின் நம்பிக்கை பல வீனமடையும்.

இந்தியாவின் 690 பில்லியன் டாலர் அந்நியச் செலா வணி இருப்பு பெரும் பொருளாதார நிலைத்தன்மைக் கான சான்றாகக் கூறப்பட்டாலும், அதன் மூலதன வரவின் கணிசமான பகுதி நீண்டகால ஏற்றுமதி சார்ந்த உபரியாக இல்லாமல், குறுகிய கால நிதி வரவுக ளாகவே (portfolio investment) உள்ளது. ஊக வணிக வடிவிலான இத்தகைய ‘குறுகிய கால மூலதனம்’ உலகளாவிய சந்தைப்போக்கிற்கு ஏற்ப மாறக்கூடியது. புவிசார் அரசியல் நிலையற்ற தன்மையின் போது, விரைவான மூலதன வெளியேற்றம் மாற்று விகித ஏற்ற இறக்கங்களையும் வெளிநாட்டு நிதி அழுத்தங்க ளையும் தூண்டக்கூடும்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் கொள்கை முரண்பாடுகளும்

தற்போதைய கொள்கையின் மற்றொரு பெரிய முரண்பாடு, இறக்குமதி குறைப்பு மற்றும் பொரு ளாதார தேசியவாதக் குரல்களுக்கு மத்தியில், மிகத் தீவிரமான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTAs) ஒரே நேரத்தில் தொடர்வதாகும்.

உள்நாட்டு உற்பத்தித் திறன் சீரற்றதாக இருக்கும் போது, விரைவான வர்த்தக தாராளமயமாக்கல் இறக்கு மதிச் சார்பை தீவிரப்படுத்தி வர்த்தகப் பற்றாக் குறையை அதிகரிக்கும் ஒருபுறம், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாட்டு நிறு வனங்கள் இந்திய சந்தையில் தங்களுக்குத் தேவை யான பொருட்களைக் கொட்டுவதற்கு வாசல்க ளைத் திறந்து விடுகிறீர்கள். மறுபுறம், உங்கள் சொந்த குடிமக்களை நோக்கித் திரும்பி, உள்நாட்டு மயமாக்கல் மற்றும் வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிப்பதன் நன்மைகளைப் பிரசங்கம் செய்கி றீர்கள். இத்தகைய பாசாங்குத்தனமான கொள் கையை ஒருபோதும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியாது.

பெட்ரோலிய இருப்புகளும் எரிசக்தி பாதுகாப்பும்

தற்போதைய எரிசக்தி நெருக்கடி, இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் காலங்களைப் பயன்படுத்தி, நெருக்கடி யைத் தவிர்க்கும் உத்தியுடன் பெட்ரோலிய இருப்பு களை (Strategic Petroleum Reserves) வலுப் படுத்திக் கொள்கின்றன. ஆனால், முந்தைய காலங்க ளில் கிடைத்த வாய்ப்புகளை இந்தியா சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. போர் வெடித்தபோது, நெருக்கடி கால உத்திசார்ந்த பெட்ரோலிய உள்கட்ட மைப்பின் பயன்பாடு அதன் கொள்ளளவில் வெறும் 65 சதவீதமாக மட்டுமே இருந்தது.

உஜ்வாலா போன்ற திட்டங்கள் மூலம் சமையல் எரிவாயுக்கான குடும்பத் தேவையை அரசாங்கம் விரிவு படுத்தியதே தவிர, அதற்கேற்ப சேமிப்பு உள்கட்ட மைப்புகளைப் பெருக்கவில்லை. தேவை விரிவாக் கத்திற்கும் நெருக்கடி கால சேமிப்புத் திறனுக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு, வெளிநாட்டு விநியோகச் சீர்குலைவுகளுக்கு எதிரான பாதிப்பை அதிகரித்துள்ளது.

விவசாயக் கொள்கையும் உர நெருக்கடியும்

எரிசக்தி விலை உயர்வு விவசாயத்தின் மீதும், குறிப்பாக உர உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளின் மீதும் தொடர் விளைவுகளை ஏற் படுத்துகிறது. உலகளாவிய எரிசக்தி பணவீக்கம் விவசாய உற்பத்தித் திறனையும் உணவுப் பொருட்க ளின் விலையையும் நேரடியாகப் பாதிக்கிறது.

இச்சூழலில், உரச் சார்பைக் குறைப்பது மற்றும் “இயற்கை விவசாயம்” குறித்து அரசாங்கம் அவசரப் படுத்துவது கேள்விக்குரியதாகிறது. உணவுப் பாது காப்பற்ற ஒரு வளரும் பொருளாதாரத்தில், முறையான நிறுவனத் தயாரிப்புகள் ஏதுமின்றி, கட்டாய இயற்கை விவசாயத்தை நோக்கி மிக வேகமாக மாறிய தால் கடுமையான விவசாய சீர்குலைவும் உணவு நெருக்கடியும் ஏற்பட்ட இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியே இதற்குச் சிறந்த எச்சரிக்கை உதாரணம்.

தங்கம் நுகர்வும் குடும்பப் பொருளாதாரப் பாதுகாப்பின்மையும்

தங்கக் கொள்முதலைக் குறைக்குமாறு குடிமக்க ளுக்குப் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள், அந்நியச் செலாவணி வெளியேற்றம் குறித்த கவலையைப் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்தியாவில் தங்கம் சேக ரிப்பது என்பது குடும்பங்களின் நிதி நடத்தை, சமூகப் பாதுகாப்பு மற்றும் முறைசாரா சேமிப்புப் பண்பாடு ஆகியவற்றுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது. தங்கம் என்பது பணவீக்கம் மற்றும் நிதிப் பாதுகாப்பின்மை க்கு எதிரான ஓர் அரணாகச் செயல்படுகிறது.

வேலைவாய்ப்பு நிச்சயமற்ற தன்மை மற்றும் சீரற்ற நலத்திட்ட உதவிகளைக் கொண்ட இந்தியச் சமூகத்தில், தங்கம் பெரும்பாலும் பரவலாக்கப்பட்ட நிதிப் பாதுகாப்பின் ஒரு வடிவமாக மாறியுள்ளது. எனவே, பரந்த அளவிலான பொருளாதாரக் கட்டமை ப்புச் சீர்திருத்தங்கள் இல்லாமல், வெறும் தார்மீக வேண்டுகோள்கள் மட்டுமே நுகர்வு முறைகளை மாற்றிவிட முடியாது.

அரசியல் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள்

பொதுமக்களுக்கான பொருளாதார வேண்டு கோள்கள், அரசியல் நம்பகத்தன்மையை பெரிதும் சார்ந்துள்ளன. அரசியல் தலைமை தன் சொந்தச் செயல்களில் சிக்கனத்தையும், நிறுவனப் பொறுப்பு ணர்வையும் வெளிப்படுத்தும்போதுதான், ‘தியாகத் திற்கான’ அழைப்புகள் சட்டப்பூர்வமான தன்மை யைப் பெறுகின்றன.

சிக்கன நடவடிக்கை குறித்த அரசாங்கத்தின் பொதுவான செய்திகளுக்கும், உயர்மட்ட சர்வதேச ராஜதந்திர நிகழ்வுகள், பிரமாண்டமான அரசியல் நிகழ்வுகள் மற்றும் மதிப்புமிக்க திட்டங்களுக்கான விரிவான அரசு செலவினங்களுக்கும் இடையே ஒரு தெளிவான முரண்பாடு உள்ளது. இந்தத் தகைமை முரண்பாடானது அதிகாரப்பூர்வ வேண்டுகோள்களின் தூண்டுதல் சக்தியைக் பலவீனப்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களின் சந்தேகத்திற்கும் இடமளித்துள்ளது.

எனவே, முதன்மையான பிரச்சனை குடிமக்கள் குறைவாக நுகர வேண்டுமா என்பது மட்டுமல்ல. மாறாக, உலகமயமாக்கல், உள்நாட்டு நலன், தொழில் துறை வளர்ச்சி மற்றும் பெரும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றை ஒரே நேரத்தில் சம நிலைப்படுத்தக்கூடிய ஒரு தெளிவான, நீண்டகால பொ ருளாதார உத்தி அரசிடம் உள்ளதா என்பதுதான். லெப்ட் வியூஸ் தமிழில் சுருக்கம் : ராகினி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.