தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளையும் தொழிலாளிகளையும் மோத விடும் மோடியின் அரசு

13 Jan 2026, 3:17 pm
விவசாயிகளையும் தொழிலாளிகளையும் மோத விடும் மோடியின் அரசு

விவசாயிகளையும் தொழிலாளிகளையும் மோத விடும் மோடியின் அரசு

முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்த குறை பாடுகளால் அது ஊழலுக்கு மறு பெயராகிவிட்டது என்றும், முந்தைய திட்டத்தை விட சிறப்பான திட்டம் விபி ஜி ராம் ஜி என்றும் ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஞாயிறன்று (ஜன.4) புதுதில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஊழலைத் தடுக்க முடியாத அரசு முந்தைய திட்டம் ஊழலுக்கு மறுபெயராகி விட்டது என்றால், இவர்களால் அதில் ஊழல் நடை பெறுவதைத் தடுக்க முடியவில்லை என்று தானே அர்த்தம். ஏனென்றால் பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளைத் தாண்டி விட்டது அல்லவா? ஊழல், முறைகேடுகளைத் தடுக்கத் தானே சமூகத் தணிக்கை முறை இருந்தது. அதைச் செயல்படுத்தி திட்டத்தை ஒழுங்காக நடத்திடலாமே. அதை விரும்பாத பாஜக அரசு, அந்தத் திட்டத்தையே தீர்த்துக் கட்டத் தானே விரும்பியது.

குறைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு

இந்தத் திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கியதாக அமைச்சர் சவுகான் கூறிக்கொள்கிறார். உண்மை யில், மோடி அரசு பதவியேற்ற நாள் முதல் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஒதுக்கும் நிதியைப் படிப்படியாகக் குறைத்தே வந்தது. திட்டம் அறிமுக மான போது பட்ஜெட்டில் 4 சதவீத நிதி ஒதுக்கப் பட்டது. தற்போது அது வெறும் 1.37 சதவீதம் தான். சுமார் ரூ.1.5 லட்சம் கோடியைக் குறைத்து வெறும் ரூ.80 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கிய நிதியையும் உரிய காலத்தில் மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. மூன்று மாதம், நான்கு மாதம் வரை கூட ஊதியம் வழங்காத கொடுமை நீடித்தது. தற்போது கூட 7, 8 வாரங்களுக்கு மேல் சம்பளம் வழங்கப்படாமலே உள்ளது. ஏற்கெனவே, ரூ.8 ஆயிரம் கோடி நிலுவை உள்ளது. வேலை கேட்டுப் பதிவு செய்தவர்கள் 2024-25-இல் 8.9 கோடி என்றால், அதில் 99 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படவில்லை.

“தேவை” என்ற அடிப்படை மாற்றப்பட்டது

பழைய திட்டத்தில் வேலை கேட்டுப் பதிவு செய்தவர்களுக்கு எல்லாம் வேலை வழங்க வேண்டும் என்பது கட்டாயம். அதாவது தேவை அடிப்படை யிலானது. ஆனால் இப்போதைய விபி ஜி ராம் ஜி  திட்டத்தில், ஒதுக்கப்படும் குறிப்பிட்ட நிதி அளவுக்கு  உட்பட்டே வேலை வழங்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தான் முந்தைய திட்டத்தை விட சிறப்பான திட்டம் என்கிறார் அமைச்சர். இந்தச் சட்டம் தேவை அடிப்படையிலான மாதிரி, கணிக்க முடியாத ஒதுக்கீடுகள் மற்றும் பொருந்தாத பட்ஜெட்டுக்கு வழிவகுக்கிறது என்று கூறி அடிப்படை நோக்கத்தையே சிதைத்து விடுகிறது என்கிறது. முந்தைய திட்டத்தில், 90% தொகை ஒன்றிய அரசால் வழங்கப்படும். இப்போது 40 சதவீதத்தை மாநில அரசுகளின் தலையில் கட்டிவிட்டார்கள். ஆனால் பெயரும் அதிகாரமும் இவர்களுக்குத் தான். இந்தச் சட்டம் ஒன்றிய அரசுக்குத் தெளிவான அமலாக்க அதிகாரங்களை வழங்குகிறது என்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேலை கேட்டுப் பதிவு செய்தவர்களுக்கு 15 நாளில் வேலை தரவில்லையெனில் அதற்கான நிவாரணம் தரும் பொறுப்பு தற்போது மாநிலங்களைச் சார்ந்தது என்று சுமையைக் கூட்டியிருக்கிறது. இதற்குப் பெயர் நெறிமுறை ஒதுக்கீடாம். வரும் நிதியாண்டுக்கு மொத்த வருடாந்திர நிதித் தேவை, மாநிலப் பங்கு உள்பட ரூ.1,51,262 கோடி என்றும், இதில் மத்தியப் பங்கு ரூ.95,692.31 கோடி என்றும் கூறுகிறார்கள். நிர்வாகச் செலவு அதிகரிப்பு முந்தைய சட்டத்தில் நிர்வாகச் செலவின் உச்ச வரம்பு 6 சதவீதமாக இருந்ததை தற்போது 9 சதவீத மாக அதிகரித்து விட்டார்கள். இந்த நிர்வாகச் செலவு களை மாநில அரசுகள் தான் ஏற்க வேண்டும். வரும் நிதி ஆண்டுக்காக ஒதுக்கும் நிதியே 125 நாள் பணிக்குப் போதுமானது என்கிறார் அமைச்சர். ஏற்கெனவே ஆதார் இணைப்பு, பயோமெட்ரிக் வருகைப் பதிவு என்று லட்சக்கணக்கான தொழிலா ளர்களை இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள். அது மட்டுமின்றி பொதுவாக 50 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை. முன்பு திரிபுராவிலும் தற்போது கேரளாவிலும் தான் அதிகபட்சமாக 90 நாட்களுக்கு மேல் வேலை வழங்கப்பட்டது. முந்தைய திட்டத்திலேயே 100 நாட்கள் என்பது குறைந்தபட்ச நாட்கள் தான். அதற்கும் மேலாக வேலை வழங்கிடவும் வாய்ப்பு இருந்தது. 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாதவர்கள் தான் 125 நாள் வேலை வழங்க சட்டம் உத்தரவாதம் தருகிறது என்கிறார்கள். 60 நாள் வேலை மறுப்பு 125 நாள் வேலையாக அதிகரித்துள்ளதாகக் கூறிக்கொண்டு 60 நாட்கள் வேலையே வழங்காமல் நிறுத்த வேண்டும் என்கிறார்கள்.

அதற்குக் காரண மாக தீவிர விவசாய வேலை நடைபெறும் காலத்தில் விவசாய வேலைக்கு ஆள்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அதைப் போக்கவே இந்தத் திட்டம் 60 நாள் நிறுத்தப்படும் என்றும் கூறுகிறார்கள். கிராமப்புற ஆதிக்கச் சக்திகள், பெரும் பண்ணை கள், பணக்கார விவசாயிகளிடமே விவசாயத் தொழிலாளர்கள் மீண்டும் குறைந்த கூலிக்கு வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள். விவசாய வேலைகளுக்குக் கட்டுபடியாகும் குறைந்த பட்சக் கூலியை வழங்காததும் தான் தொழிலாளர் பற்றாக்குறைக்குக் காரணம். அதை மாற்ற நடவ டிக்கை எடுக்காமல் 100 நாள் வேலையால் தான் இந்தப் பற்றாக்குறை என அதன் மீது பழியைப் போடுகிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி விவசாய விளைபொருள்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவதாகக் கூறி ஏமாற்றிய மோடியின் அரசு, கட்டுபடியான விலை வழங்க சட்டப்பூர்வ ஏற்பாடு செய்வதையும் கைவிட்டது. ஓர் ஆண்டுக்கு மேல் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை விலக்கிக் கொள்ளக் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறை வேற்றவில்லை. கடன் தள்ளுபடி, இடுபொருள்கள் விலை குறைப்பு போன்றவற்றைச் செய்து விவசா யிகளைக் கடன் வலையில் இருந்து மீட்க பாஜக அரசு எதுவும் செய்யவில்லை.

அதனால் இந்த அரசு மீதிருக்கும் விவசாயிகளின் கோபத்திலிருந்து தப்பிப்பதற்காகவே அதனை விவசாயத் தொழிலாளர்கள் மீது திருப்பி விட்டு இந்த 60 நாள் வேலை முடக்கச் சரத்தைச் சேர்த்திருக் கிறார்கள். கார்ப்பரேட் ஆதரவு, பண்ணை முதலாளிகள் ஆதரவு நிலைபாட்டிலிருந்தே இந்த 60 நாள் திட்ட முடக்கம். அதையும் கூட மாநில அரசு செய்யும் என்று பழியேற்பை அதன் பக்கம் தள்ளிவிட்டு விட்டார்கள். இத்தகைய திசைதிருப்பும் இந்துத்துவா தந்திரத் தால் விவசாயிகளையும் விவசாயத் தொழிலா ளர்களையும் எதிரெதிராய் நிறுத்திடும் சூழ்ச்சியான வேலையைச் செய்திருக்கிறார்கள்.

விவசாயிகளையும் விவசாயத்தையும் பாது காக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு, அவர்களைப் பாதிக்கும் மின்சாரச் சட்டத் திருத்தம், விதை சட்டத் திருத்த வரைவு ஆகிய வற்றைக் கொண்டு வந்துள்ள துரோகத்தை மறைப்ப தற்காகவே இந்தச் சமாளிப்பு வேலை. நேரில் நின்று  போரிட்டால் சக்தியற்றுப் போய்விடுவோம் என்று  அஞ்சிய ராமன் மரத்தின் பின்னால் மறைந்திருந்து வாலியைக் கொன்றது போல் விவசாயத்தையும் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் கிராமப்புறப் பொருளாதாரத்தையும் அழித்திடவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள், பாஜக ஆட்சியாளர்கள். இவர்களது முந்தைய எஜமானர்களான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொள்கையும், இன்றைய குரு பீடமான ஆர்எஸ்எஸ் - இந்துத்துவாக் கூட்டத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியையும் புரிந்துகொண்டு பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிப்பதே இப்போது நாட்டு மக்களின் காலக் கட்டாயமாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.