முந்தய பக்கம்

அரசு மருத்துவமனையில் நவீன ஸ்கேன் மையம் திறப்பு

16 Nov 2025, 3:30 pm
அரசு மருத்துவமனையில் நவீன ஸ்கேன் மையம் திறப்பு
<p><strong>அரசு மருத்துவமனையில் நவீன ஸ்கேன் மையம் திறப்பு</strong></p> <p>தருமபுரி, நவ.16- பாலக்கோடு அரசு மருத் துவமனையில் நவீன ஸ்கேன் மையத்தை ஆட்சி யர் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் இசிஒ சிஸ்டம் என்ற நவீன ஸ்கேன் மையத்தை மாவட்ட ஆட்சி யர் ரெ.சதீஸ் திறந்து வைத்து &nbsp;பார்வையிட்டார். இதன்பின் மருத்துவமனை யில் புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மற்றும் மருந்தகம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்து, நோயாளிகள் பதிவு செய் யும் பிரிவில் உள்ள கணினியில் நோயாளிகள் &nbsp;விவரம் பதிவு செய்வது குறித்து பணியாளர்க ளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு &nbsp;சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் &nbsp;நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள் ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து, நோயாளி களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சிகிச்சை பெற வருபவர்களின் உதவியா ளர்கள் காத்திருக்கும் இடத்தினை ஆய்வு செய்து, அவர்கள் அமர்வதற்கான உரிய ஏற் பாடுகளை மருத்துவனையில் ஏற்படுத்தி தர &nbsp;வேண்டும்எனவும்,மருத்துவமனையினையும், வளாகத்தினையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களி டம் அறிவுறுத்தினார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவின் தரம் &nbsp;குறித்து கேட்டறிந்தார். மேலும், நாய் கடி மற் றும் பாம்பு கடிக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளதா என்பதை மருத்து வர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆட்சியர் &nbsp;ரெ.சதீஸ் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உட னிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram