தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

17 Dec 2025, 4:11 pm
சென்னை விரைவு செய்திகள்

இளைஞரின் வாழ்வை மீட்டெடுத்த நவீன மருத்துவத் தொழில்நுட்பம்

சென்னை, டிச.17- ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது பொறியியல் மாணவர், கடந்த 10 ஆண்டுகளாக ‘ஹைபோதலாமிக் ஹமார்டோமா’ எனும் அரிய வகை மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு, கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு மற்றும் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். மூளையின் மிக ஆழமான பகுதியில் இக்கட்டி இருந்ததால், சாதாரண அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானது எனக்கருதப்பட்டது. இதையடுத்து, சென்னை அப்போலோ புற்றுநோய் மையத்தில் மருத்துவர்கள், அதிநவீன ‘கதிரியக்க அறுவைசிகிச்சை’ மூலம் ரத்தமின்றி, மண்டை ஓட்டைத் திறக்காமல் சிகிச்சையளித்தனர். சுற்றியுள்ள நரம்புகளுக்குப் பாதிப்பின்றி கட்டி துல்லியமாக அகற்றப்பட்டது.   இந்த சிகிச்சைக்குப் பின், நீண்ட நாள் வேதனையி லிருந்து மீண்ட நோயாளி ஒரே நாளில் வீடு திரும்பினார். நவீன மருத்துவத் தொழில்நுட்பம் ஒரு இளைஞனின் வாழ்வை மீட்டெடுத்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசியர்கள்  தேர்வுப்பணிகளை புறக்கணிக்க முடிவு

சிதம்பரம், டிச 17- அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசியர்கள் கூட்டமைப்பு தேர்வுப்பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யதுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம்  பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சி.சுப்ரமணியன் தலைமை வகித்து பேசினார்.இணை ஒருங்கிணைப்பாளர்கள் முத்துவேலாயுதம்,தனசேகரன், ஜான்கிருஸ்டி, செல்வராஜ், செல்லபாலு, ரொனால்டூ ரோஸ் மற்றும் பேராசிரியர்கள் மோகன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில்  பதவி உயர்வு உள்ளிட்ட 7 அம்சக்கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி கடந்த நவம்பர் 10ம் தேதி முதல் 15-ம் தேதி வரை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகளில் கோரிக் கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாத சூழல், அதில் முன்னேற்றம் ஏற்படும் வரைநவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது  என்று முடிவு செய்யப்பட்டது.

மதுபானம் கடத்தி விற்றவர் கைது

விழுப்புரம், டிச.17- புதுச்சேரியில் இருந்து மது பானங்கள் கடத்தி வந்து  விழுப்புரத்தில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரியிடம் இருந்து 90 எம்எல் அளவு கொண்ட 100 பாட்டில்களை கைப்பற்றினர்.

சங்கராபுரம் காவல் நிலையத்தில்  காவலர்கள் பற்றாக்குறை

கள்ளக்குறிச்சி, டிச.17 - சங்கராபுரத்தில் கடந்த 75 ஆண்டு களுக்கு முன்பு காவல் நிலையம் துவக்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்களை நிய மிக்கப்பட்டனர். தற்போது இந்த காவல் நிலையத்தில் 40 காவலர்கள் மட்டுமே பணி செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இதில் பலர் நீதி மன்ற பணி  ரோந்து சம்மன் வழங்கல் குற்ற செயலில் ஈடுபடுவோரை பிடிக்கும் தனிப்படை கலால் என பல்வேறு பணி களுக்கு சென்று விடுகின்றனர். சிலர் மருத்துவ விடுப்பில் செல்கின்றனர். இதனால் காவல் நிலையத்தில் பணியில் 20 பேர் மட்டுமே உள்ளனர். பணியில் உள்ள சொற்ப அளவிலான காவலர்கள் கட்சி பொதுக்கூட்டம் தலைவர்கள் வருகை கோவில் திருவிழா பாதுகாப்பிற்கு சென்று விட்டால் காவல் நிலையத்தில் எழுத்தர் தவிர யாரும் இருப்பதில்லை, சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுமார் 52 கிராமங்கள் உள்ளது. சங்கராபுரம் பகுதியில் மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் தகராறு விபத்து திருட்டு ஆகியவை நடைபெறும் போது சம்பவ இடத்திற்கு போலீசார்  அனுப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. காவல்துறை பற்றாக்குறையால் சங்கரா புரம் பகுதியில் கடந்த பல மதங்களாக நடந்து வரும் கொலை. கொள்ளை. போதை பொருள் புழக்கம், கனிம வளங்கள் கொள்ளை. கள்ளச்சாராயம் விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி  வருகின்றனர், நிலம் சம்பந்தப்பட்ட பணப் பிரச்சனை, அடிதடி பிரச்சனைகள் சம்பந்த மாக புகார் அளித்தால் மாத கணக்கில் சங்கராபுரம் காவலர்கள் இழுத்தடிக்கும் நிலை நீடிக்கிறது. பெண்கள் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் போது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சுமார் 30 கிலோமீட்டர் தொலை வில் உள்ள திருக்கோவிலூருக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். எனவே சங்கராபுரம் காவல் நிலை யத்தில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,  மாவட்ட துணை   கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தை சங்கரா புரத்தில் அமைக்க வேண்டும் என பொது மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  சங்கராபுரம் ஒன்றிய குழுவும் கோரிக்கை விடுத்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.