தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நவீன சிகிச்சை மூலம் மார்பக புற்றுநோயை குணப்படுத்திய மருத்துவர்கள்

17 Jun 2026, 10:37 pm
நவீன சிகிச்சை மூலம் மார்பக  புற்றுநோயை குணப்படுத்திய மருத்துவர்கள்

நவீன சிகிச்சை மூலம் மார்பக புற்றுநோயை குணப்படுத்திய மருத்துவர்கள்

சென்னை, ஜூன் 17- 54 வயது பெண்மணி ஒரு வருக்கு ஏற்பட்ட 2 ஆம் நிலை மார்பகப் புற்று நோயை நவீன ‘பிராக்கி தெரபி’ எனப்படும் உள் கதிர்வீச்சு சிகிச்சை முறை யின் மூலம் சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் வெற்றிகரமாகக் குணப் படுத்தியுள்ளனர். முதலில் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதன் பிறகு, எஞ்சியிருக்கக் கூடிய நுண்ணிய புற்று நோய் செல்களை முழுமை யாக அழித்து நோய் மீண்டும் வராமல் தடுக்க, பிராக்கி தெரபி சிகிச்சை அளிக்கப் பட்டது . இந்த வெற்றிகரமான சிகிச்சையை, சூளைமேடு எம்ஜிஎம் புற்றுநோய் மருத்துவமனையின் முது நிலை அறுவைசிகிச்சை நிபு ணர் டாக்டர் சிவகுமார் மகாலிங்கம் மற்றும் டாக்டர் அலெக்ஸ் ஏ. பிரசாத் தலை மையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட னர். கட்டி இருந்த பகுதியில் ஐந்து மெல்லிய குழாய்கள் (கதீட்டர்) செலுத்தப்பட்டு, இரண்டு நாட்களில் நான்கு அமர்வுகளாகத் துல்லிய மான கதிர்வீச்சு வழங்கப் பட்டது. இந்த முறையின் சிறப்பம் சம் என்னவென்றால், கதிர் வீச்சு புற்றுநோய் இருந்த இடத்திற்கு மட்டும் செலுத்த ப்படுவதால், இதயம், நுரையீரல் போன்ற சுற்றி யுள்ள ஆரோக்கியமான உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. மேலும், சாதாரண கதிர்வீச்சு சிகிச்சையில் ஏற்படும் தோல் நிற மாற்றம், வடுக்கள் மற்றும் திசுக்கள் கடினமா தல் போன்ற பக்கவிளைவு களும் தடுக்கப்படுகின்றன என்று மருத்துவர்கள் தெரி வித்தனர். இந்த நவீன சிகிச்சை முறை மார்பகத்தை அகற்றா மல் பாதுகாப்பதுடன், நோயாளிகள் விரைவாகத் தங்கள் இயல்பு வாழ்க்கை க்குத் திரும்புவதையும் உறுதி செய்கிறது என்றும் அவர்கள் கூறினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.