தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  மாதிரிச் சட்டம் நாளை வெளியீடு

21 Jun 2026, 10:38 pm
சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  மாதிரிச் சட்டம் நாளை வெளியீடு
<p>சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க&#160; மாதிரிச் சட்டம் நாளை வெளியீடு</p><p>சென்னை, ஜூன் 21 - சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் இயற்றிட வலியுறுத்தி ஜனநாயக மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதற்காக அடுத்தடுத்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தது. பல்வேறு அமைப்புகளின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவே திமுக அரசு சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்ட வழிமுறைகளை உருவாக்கித் தருவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது சட்ட வல்லுநர்கள் உதவியுடன் ஆணையத்திற்கான பரிந்துரைகளை உருவாக்கியது. தலித் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் கூட்டம் ஒன்றிக்கு அழைப்பு விடுத்து, அக்கூட்டத்தில் மக்கள் அமைப்புகளின் ஆலோசனைகளையும் பெற்று நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திற்கு வழங்கியது. இத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக, தற்போது சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான மாதிரிச் சட்டம் ஒன்றை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கியுள்ளது. அதனை விரைவில் நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திற்கு வழங்கவுள்ளது. அதற்கு முன்னதாக மக்கள் மன்றத்தில் அதனை வெளியிடுவது அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வரைவுச் சட்டத்தை தலித் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஜூன் 23 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரிலுள்ள சிபிஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்தில் வெளியிடவுள்ளார் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.