முந்தய பக்கம்

தனியார் மழலையர் பள்ளியில் மாதிரி தேர்தல்

23 Jan 2026, 5:49 pm
தனியார் மழலையர் பள்ளியில் மாதிரி தேர்தல்
<p><strong>தனியார் மழலையர் பள்ளியில் மாதிரி தேர்தல்</strong></p> <p>நாமக்கல், ஜன.23- பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், மாதிரி தேர்தல் நடத்தப் பட்டு, குழந்தைகளுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - &nbsp;திருச்செங்கோடு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து &nbsp;வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களி டையே தலைமை பண்பை வளர்க்கும் நோக்கத்திலும், இந்திய தேர்தல் அமைப்பு முறையை தெரிந்து கொள்ளும் வகையிலும், மாணவர்களிடையே வெள்ளியன்று மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்பு &nbsp;நடந்தது. இதில் 15 மாணவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தனர். இந்நிகழ்வில், பள்ளி பாளையம் நகராட்சி ஆணையர் தயாளன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். வேட்பாளர்களுக்கு பள்ளியில் அன்றாடம் பயன்படுத்தப்படும் லப்பர், பென்சில், புத்த கங்கள் ஆகியவை சின்னங்களாக ஒதுக்கப் பட்டு, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இடையே வேட்பாளராக போட்டியிடும் பள்ளி குழந்தைகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் தங்களுக்கான வாக்கு களை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளியன்று நடைபெற்ற வாக்குப்பதி வில், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் வாக்களித்தனர். 100 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக அரக்கு கொண்டு சீல் வைக்கப்பட்டு பள்ளியில் வைத்து பூட்டப்பட்டது. தொடர்ந்து வரும் செவ்வாயன்று பெற்றோர்கள் முன்னிலை யில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள் ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, மற்றும் சக &nbsp;ஆசிரியர்கள் செய்திருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram