தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெய்வாபாய் பள்ளியில் மாணவியருக்கு மாதிரி தேர்தல்

4 Dec 2025, 3:52 pm
ஜெய்வாபாய் பள்ளியில் மாணவியருக்கு மாதிரி தேர்தல்
<p><strong>ஜெய்வாபாய் பள்ளியில் மாணவியருக்கு மாதிரி தேர்தல்</strong></p> <p>திருப்பூர், டிச. 4 - பள்ளி பருவத்திலேயே மாணவர்க ளிடம் தேர்தல் நடைமுறை மற்றும் வாக் குப்பதிவு முறைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறை, &nbsp;தேர்தல் ஆணையம் சார்பில் புதனன்று திருப்பூர் ஜெய்வா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் மாதிரித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நடைமுறைகள், பரப்புரை, &nbsp;வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண் ணிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் ஜெய்வாபாய் பள்ளியில் &nbsp;இந்த மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் குறிஞ்சி, முல்லை, &nbsp;மருதம், நெய்தல், பாலை என ஐந்து &nbsp;குழுக்களாகப் பிரிந்து அரசியல் கட்சி கள் போல பரப்புரையில் ஈடுபட்டனர். தங்கள் அணி சார்ந்த கொள்கைகளை பிரச்சாரம் செய்தனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவிகள் வாக்காளர் &nbsp;அடையாள அட்டை மாதிரி உருவாக்கம் &nbsp;செய்து அதன் மூலம் வாக்களிக்க தயா ரானார்கள். தேர் தல் அலுவலர் கள், பூத் முகவர் கள் உள்ளிட்ட வர்கள் முன்னி லையில் வாக் காளர் பட்டியலில் பெயர் சரி பார்க் கப்பட்டு கை விரல்களில் மை வைக்கப்பட்டு பின்னர் வாக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து புதனன்று &nbsp;வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு &nbsp;வெற்றி பெற்றவர்களின் விவரம் தேர் தல் நடைமுறை போல அறிவிக்கப் பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களாக அறி விக்கப்பட்ட மாணவிகள் ராஜ் பவன் &nbsp;மாதிரி அமைக்கப்பட்ட வகுப்பறை யில் ஆளுநர் முன்னிலையில் பொறுப் பேற்று கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கலந்து கொண்டு மாணவிகளின் தேர் தல் நடைமுறைகளைப் பார்வையிட் டார். இதைத் தொடர்ந்து மாணவி கள் மத்தியில் பேசிய அவர், பள்ளி &nbsp;பருவத்திலேயே தேர்தல் நடைமுறை களை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் முதல் முறை வாக்களிப்பவர்கள் அச்ச மின்றி வாக்களிக்க செல்வர். அதே &nbsp;நேரத்தில் தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர &nbsp;திருத்தம் 2026 க்கான விண்ணப்பங் களை உங்கள் வீட்டில் உள்ள வாக்க ளிக்க தகுதியான பெற்றோர், உறவினர், &nbsp; சகோதரரிடம் பூர்த்தி செய்து திரும்ப அலுவலர்களிடம் ஒப்படைப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண் டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.