சாதி ஆணவப் படுகொலை தடுப்பு மாதிரி சட்டம் வெளியீடு! தனிச்சட்டத்தை விரைந்து நிறைவேற்ற பெ.சண்முகம் வலியுறுத்தல்!
23 Jun 2026, 10:30 pm

சாதி ஆணவப் படுகொலை தடுப்பு மாதிரி சட்டம் வெளியீடு! தனிச்சட்டத்தை விரைந்து நிறைவேற்ற பெ.சண்முகம் வலியுறுத்தல்!

சென்னை, ஜூன் 23 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கியுள்ள “சாதி ஆணவப்படுகொலை தடுப்பு மாதிரி சட்டத்தை” மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் ஜூன் 23 செவ்வா யன்று சென்னையில் வெளியிட்டார்.

‘இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் “கவுரவம்” என்ற பெயரிலான கொலை கள், குற்றங்கள் தடுப்பு (பாது காப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா- 2026’ எனும் பெயரிலான இந்த மாதிரி சட்டத்தை, ஆணவப் படு கொலையில் தங்களது இணை யரை இழந்த அனுசுயா மற்றும் திலீப் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தலித் விடுதலைக் கான தேசிய மேடையின் அகில இந்தியத் துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், துணைச் செயலாளர் கே. சுவாமிநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த. செல்லக் கண்ணு, பொதுச்செயலாளர் பி.சுகந்தி, வழக்கறிஞர் டி.ஆர். உதயகுமார் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழர் உரிமை மீட்புக் களம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பாஷா ஆணையமும் தனிச்சட்டத்தின் தேவையும் இந்நிகழ்வின் போது, செய்தி யாளர்களிடம் பெ. சண்முகம் பேசியதாவது: சாதி ஆணவக் கொலை களைத் தடுக்கத் தனிச்சட்டம் வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 12 ஆண்டு களுக்கும் மேலாக வலி யுறுத்தி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பேசும்போது தமிழ்நாட்டில் ஆணவக்கொலையே நடக்க வில்லை என்றார்.

முந்தைய திமுக ஆட்சியிலும் அமைச்சர்கள் ஏற்கெனவே உள்ள சட்டமே போதுமென்றனர். நெல்லை கவின் கணேஷ் ஆணவக்கொலைக்கு பிறகு, சிபிஎம் சார்பில் நானும், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகிய மூவரும் சென்று அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனிச்சட்டத்தின் தேவை குறித்து வலியுறுத்தினோம். அதன் விளைவாகவே, சட்டத்தை உருவாக்க நீதிபதி கே.என். பாஷா ஆணையம் அமைக் கப்பட்டது. தற்போது தயாரிக்கப் பட்டுள்ள இந்த மாதிரி வரைவு மசோதாவை பாஷா ஆணை யத்திடம் வழங்க உள்ளோம்.

இப்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய், மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதிக் கோட்பாட்டில் உறுதியாக இருப்போம் என்ற உறுதிமொழியை ஆளுநர் உரை யிலும் எழுத்துப் பூர்வமாகக் கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த உறுதி மொழிப்படி நடந்து கொண்டால் போதும். சாதிஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை இந்த அரசை நிறைவேற்ற வைப்போம்.

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு சிபிஎம் பாதுகாப்பு அளிக்கும் உசிலம்பட்டி திலீப்குமார் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்துச் சிறப்பான தீர்ப்பை வழங்கியும், அதனைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தவில்லை.

வயது வந்தோர் தங்களின் இணையரைத் தேர்வு செய்யும் உரிமையை அரசிய லமைப்பு சாசனம் வழங்கியுள்ளது.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். சாதி ஒழிப்பை முக்கிய கடமை யாக சிபிஎம் கொண்டுள்ளது.

ரத்தக்கலப்பு நிகழும்போதுதான் சாதி ஒழியும் என்று அம்பேத்கர் கூறி யுள்ளார். சாதி, மத மறுப்புத் திரு மணங்களைச் சிபிஎம் அலுவல கத்தில் நடத்தி வைப்பது, பதிவு செய்வது, பாதுகாப்பு மற்றும் எதிர்கால உத்தரவாதம் அளிப்பது போன்ற சவால் நிறைந்த சமு தாயக் கடமையைத் தொடர்ந்து செய்வோம்.

சாதித் தூய்மையைக் காப்பது என்ற பெயரிலான ஆத்திரத்தில் தான் நெல்லை சிபிஎம் அலுவல கத்தைச் சாதி வெறியர்கள் தாக்கி னர்.

சாதி ஆணவப் படுகொலை களில் சாதி சங்கங்கள், சாதியத் தலைவர்கள் நேரடியாகவோ மறை முகமாகவோ இதில் சம்பந்தப் பட்டிருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரும் வகை யில் இந்த மசோதா உருவாக்கப் பட்டுள்ளது. மேலும், உடுமலை சங்கர் - கவுசல்யா ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகள் விடு தலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கை உச்சநீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்குக் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும்.

வன்கொடுமை வழக்கு களைப் பதிவு செய்வதில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைக்குக் கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அரசியல் நிலைப்பாடு சட்டமன்றத்தில் செவ்வாயன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பெ.சண்முகம், “குறிப்பிட்ட நோக்கத்திற்காகத்தான் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆத ரவு அளிக்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைய வேண்டும்; அதற்கான வாய்ப்பு அதிக உறுப்பினர்களைக் கொண்ட தவெக-விற்குத்தான் இருந்தது.

கடந்த மே மாதச் சூழலில் நாங்கள் ஆதரவளிக்காமல் போயிருந்தால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும். தமிழகத்தில் பாஜக கால் ஊன்றக் கூடாது என்பதற்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்தக் கருத்து டைய கட்சிகளுடன் இணைந்து போராடி வருகிறது.

மறைமுகமாக பாஜக ஆட்சி நடத்தும் வகையில் குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதைத் தடுக்கவே தவெக-விற்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். இது எங்கள் அரசியல் நிலைப் பாடு” என்று விளக்கமளித்தார்.