வங்கி செக்குகளைத் திருடி போலியாக கையெழுத்திட்டு ரூ.1 கோடி மோசடி செல்போன் கடை ஊழியர்கள்-தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு
18 Jun 2026, 9:33 pm

வங்கி செக்குகளைத் திருடி போலியாக கையெழுத்திட்டு ரூ.1 கோடி மோசடி செல்போன் கடை ஊழியர்கள்-தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு

குழித்துறை,ஜூன் 19- செல்போன் கடை உரி மையாளரின் வங்கி செக்கு களை திருடி,போலியாக கையெழுத்திட்டு, ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், கருங் கல் ஆலன் விளை பகுதி யைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஐயப்பன் (வயது 51). இவர் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார் .கருங்கல் பேருந்து நிலை யம் அருகே தனியார் மொ பைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் .

இவரது மைத்து னர் சுபின் மொபைல் நிறு வனத்தை நடத்தி வந்தார். இவர் அடிக்கடி வெளிநாடு செல்வதுண்டு. அவருக்கு துணையாக கப்பியரையைச் சேர்ந்த அருள்செல்வன் மகன் அபிஷேக் (வயது 27) வேலை செய்து வந்தார்.

வியாபார தேவைக்காக மார்த்தாண்டத்தில் இரண்டு வங்கிகளில் அக்கவுண்ட் வைத்துள்ளார் .நிறுவன நிர்வாகத்திற்காகவும் அவ சர தேவைகளுக்கும் கையொ ப்பமிட்ட பூர்த்தி செய்யப் படாத 10 செக்குகளை மைத்துனர் சுபின் வசம் கொடுத்துள்ளார். மேலும் ஒரு செல்போ னும் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் சுபின் திடீரென்று காலமா னார். தகவல் அறிந்து இந்தியா வந்து கடையை தொ டர்ந்து நடத்த ஆலோசித்த ஐயப்பன் கூறுகையில், அபிஷேக் கடையை தொ டர்ந்து நடத்த ஆரம்பித்தார்.

உதய மார்த்தாண்டத்தைச் சேர்ந்த டேவிட் மகன் அபிஸ் (வயது 27 )ஊழியராக சேர்ந்தார். செல்போனையும் இவரே பயன்படுத்தி வந்தார் .இந்த நிலையில் அபிஷேக்கிற்கு கடந்த 2025 பிப்ரவரி 17ஆம் தேதி கடன் உறுதி பத்திரம் வாயிலாக ரூ.20 லட்சம் கடனாக கொ டுத்துள்ளேன்.

நிறுவன வங்கிக் கணக்குகளை இன்டர்நெட் வாயிலாக பராமரித்து வந்தேன். இந்த நிலையில் சொந்த அவசியத்திற்காக கார் வாங்குவதற்கு வங்கியில் லோன் தேவைப்பட்டதால் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் சிபில் ஸ்கோரை சரிபார்த்தபோது எனது பெயரில் ஒரு கோடிக்கு அதிகமான கடன் தொகை முழுமையாக இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன்.

அதனை பரிசீலனை செய்த போது பஜாஜ் மைக்ரோ பைனான்ஸ் நிறுவ னத்தில் எனது நிறுவனத்தின் சார்பாக கடன் தொகை எனது பெயரிலே பெற்றுள்ளதும் அவ்வப்போது மாத கடன் தொகை செலுத்தப்பட்டுள்ள தும் தெரிய வந்தது. ஊழியர்கள் இருவரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின்னாக பதில் கூறினர்.

இதனால் சந்தேகம் ஏற்பட்டது. பைனான்ஸ் நிறுவனத்தில் அணுகி விசா ரித்த போது கடந்த 2023 செப்டம்பரில் எனது இரண்டு செக்குகளை ஜாமீனாக கொடுத்து ஆதார் மற்றும் பான் கார்ட் நகல்களை எனது கையொப்பத்தையும் எனது மொபைல் நிறுவனத்தின் சீல்களையும் பயன்படுத்தி கடன் பெற்றது தெரிய வந்தது. அதனை அவ்வப் போது எனது பெயரி லேயே திருப்பியும் செலுத்தி யிருப்பது தெரிய வந்தது.

தனியார் நிறுவனம் முன்பாக நான் கையொப்பங் கள் இட்டதாக காணப் பட்டது. அதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். காலமான மைத்துனர் சுபின் வசம் இருந்த செக்குகளை இருவரும் திருடி சொந்த அவசியத்திற்காக மோசடி யாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

மொபைல் கடையின் வங்கி பதிவிறக்கம் ஆடிட்டர் மூலம் ஆய்வு செய்தபோது இருவரும் சேர்ந்து ரூ. 97 லட்சத்து 75 ஆயிரத்து 85 ரூபாய் கையாடல் செய்தி ருப்பது தெரிய வந்தது என்றார்.

இதுகுறித்து ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் அபிஷேக், அபிஸ். பஜாஜ் மைக்ரோ பைனான்ஸ் நிர்வாக மேலாளர் மற்றும் லோன் பிரிவு மேலாளர் ஷைபின் ஆகிய நான்கு பேர் மீது நாகர்கோவில் பொ ருளாதாரப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.