தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபத்து

16 May 2026, 8:08 pm
விபத்து

விபத்து

உயர் பொறுப்பிலிருக்கும் அவர், எப்போதும் பிறரோடு நேரங்காலமின்றி உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதிலும் எந்நேரமும் கைப்பேசியில் அளவளாவிக் கொள்வதில் பேரின்பம் கொண்டிருப்பார்.

நட்பு பாராட்டுவதில், அன்பை விஸ்தரிப்பதில், பிறர் இடர்களில் வருத்தம் தெரிவிப்பதில், காலங்கருதி உதவுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

இருசக்கரம் ஓட்டும்போது கழுத்திற்கும் தோளிற்கும் நடுவில் இடுக்கிபோல கைபேசியை நழுவவிடாமல் அணைத்துக்கொண்டு வெகுதூரம் பேசிப்போவார்.

உரசிப்போகும் வாகன ஓட்டிகளின் வசைகளை சாலைகளில் வாங்கிக் கட்டியிருக்கிறார். பல விபத்துகளிலிருந்து தப்பித்துமிருக்கிறார்.

இருந்தென்ன, காதுக்கும் மூளைக்கும் எதுவும் எட்டியதாகத் தெரியவில்லை. அந்தயிடத்தில் அறிமுகவற்றவரோடு அவர் விவாதம் செய்வதில்லை.‌

கண்டும் காணாமலும் போய்விடுவார். காரணம் எதிர்த்தரப்பினரின் பலமும் பலவீனமும் அவருக்கு தெரியாது என்பதுதான்.

ஆழம் தெரியாமல் காலை விடமாட்டார்.

சாலையில் யாரேனும் அவரைக் கண்டால், நிச்சயம் கழுத்துநரம்பு அவரவர்க்கு பிடித்திழுத்துக்கொள்வது உறுதி.

காதில் செல்லை வைத்தபடியே காலை மாலை நடைப்பயிற்சி செய்பவர்.

பேச்சு சுவராஸ்யத்தில் ஒரு இலக்கற்ற தொலைவிற்கு சென்றுவிடுவதும் உண்டு.

இதற்குள் பல மிஸ்டு கால்கள் வரிசை கட்டியிருக்கும்.

‘சார்ஜ்’ இல்லாமலோ, சிக்னல் பிரச்சனைனாலோ இணைப்புத் துண்டித்தாலொழிய, இவராக இணைப்பைத் துண்டிப்பதில்லை.

இந்த நேரங்களில் எதிரில் எவர் வந்து நின்றாலும் தெரியாது. கழிவறை சென்றால்‌கூட பிறர் வந்து திட்டத்தான் வேண்டும்.

அப்படியொரு ஏகாந்த நிலையில், மலர்வனத்தில் இளைப்பாறுவதுப்போலவே பேசிக்கொண்டிருப்பார்.

செல் பேசியின் மீது தீராத ஒருவகைப் போதை..

பேச்சுக்குப் பேச்சு கலகலவெனச் சிரிப்பார். இடம் பொருள் பார்க்கமாட்டார். தடாலடியாகப் பேசுவார். கருத்தும் சொல்வார்.

கடிந்தும் கொள்வார். ச

ட்டெனப் பாடுவார்

. சிலநேரம் மென் மோனத்திலிருப்பார். கண்களை அகல விரித்து, செல்லை நோண்டுபவர்கள் ஒருவகையெனில், வாயை அகல விரித்து இவர் பேசுவது ஒருவகையாயிருக்கும். இரவுகளில் உறக்கம் இவரைத் தழுவினாலொழிய இவர் உறக்கத்தைத் தழுவிக்கொண்டதே இல்லை.

அலுவலகத்தில் அலுவலானப் பேச்சு ஒருகட்டத்தில் திசைமாறிப்போய், மதியச் சாப்பாடே வந்துவிடும்.

இரவில் தொடங்கினால் சேவலும் கூவிவிடும். பெரும்பாலும் கையிலிருக்கும் சார்ஜர் போட்டபடிதான் போன் பேசுவார்.

வீட்டின் அதிகாரம் மொத்தமும் இவரின் கைப்பிடிக்குள்ளிருப்பதால், மறுதலித்துப் பேசுவதற்கு யாருக்கும் துணிச்சல் இராது.

அவ்வப்போது பொறுமலிருந்தாலும் வரும் இடையூறுகளைப் பொசுக்கி விடுவதுபோல் ஒரு பார்வை பார்ப்பார்.

அவரின் இணையர் அன்புதழுவ கையில் காப்பி ஆற்றியவாறு கொடுப்பார்.

போனில் பேசியவாறு கையால் சைகைகாட்டி டேபிளில் வைத்துவிடச் சொல்லுவார். அவர்களின் அக்கறையின் மீது லட்சியம் கொள்ளமாட்டார்.

குடும்பத்தோடு அமர்ந்து உண்டாலும், தொலைவில் எங்கோ அப்பா இருப்பதுபோலவே தோன்றும்.

உண்பது இட்லியா சப்பாத்தியா தெரியாது. அது நல்லாருக்கிறதா இல்லையா‌? உப்பாவது இருக்கிறதா? ஏதாவது‌சொல்லனுமே, மாட்டாரே என அன்பிற்கு ஏங்கி நிற்கும் குடும்பத்திற்கு, மன குமைச்சல்கள்தான் மிக அதிகம்.

எல்லோருக்கும் படுக்கையறை ஒன்றுதான். இருந்தென்ன? வாழ்க்கை தனித்தனியேதான். பிள்ளைகள் எதேச்சையாக நெருங்கி வந்தால் சிறு புன்புறுவலோடு புருவத்தால் சைகைகாட்டி வேலையாட்கள் போல காத்திருக்கச் சொல்லுவார்.

காணும் மனைவி “போனை கட்டிக்கொண்டே அழட்டும் நீங்க வந்து தூங்குங்க” . அவர் மனைவியின் கோபத்தில் விரைப்பிருக்கும், ஒருநாளும் சத்தமிருக்காது.

அவர் இன்னாருக்கென்று திட்டமிட்டு போன் பேசுவதில்லை. குலுக்கலில் விழுவது போன்றுதான்.

சேவ் (Save) வாகியிருக்கும் முந்தி வரும்‌ஒரு எண்ணிற்கு கால் (call) செய்வார். சிக்கிக்கொண்டவரின் கதியோ அதோகதிதான்.

இப்படியாக அழைக்க எதிர்முனையில் எடுக்கவில்லையெனில் அடுத்து முயற்சிக்கவே மாட்டார்.

அச்சமயம் கோபம் தலைக்கேறியிருக்கும். தவறிய அழைப்பைக்கண்டவர் திரும்ப அழைத்தாலும் தொடர்ந்த பல அழைப்பிற்குப்பிறகே எடுப்பார்.

தன்தரப்பு நியாயத்தை முன்வைத்தாலும் உதாசினப் படுத்துவார். எப்போதும் சரியாக இருக்கக்கூடியவர் என்பதால் தான் பிடித்தபிடியில் திமிராக இருப்பார். இருவருக்குமான போன் உரையாடல்களில் ஒருவருக்கு, மற்றொருவரின் அழைப்போ, இல்லை சிறுவேலையோ வந்துவிடும். சார் ஒரு ஐந்து நிமிடத்தில் நானே திரும்ப அழைக்கிறேன் பிளீஸ்.

ஒரு நண்பரின் கால் வருகிறது. இல்லை வேறு அவசரப்‌போன் வருகிறதெனக் கூறி கட் செய்தால் போதும், வேறுவினையே வேண்டாம். அவமதிப்புக்குள்ளானவராகவும், பெரும் கவுரவப் பிரச்சனையாகவும் கருதி, நீண்ட நாட்கள் பேசமாட்டார்.

உயர் அதிகாரி . நல்ல பொருளாதாரப் பின்னணி கொண்டவர். எல்லோருக்கும் நம் தயவுதானே தேவைப்படுகிறது என்ற கர்வம் அவருக்கு நிலை கொண்டிருந்தது.

என்னைவிட உங்களுக்கு பெரிய ஆள் உண்டா? நானே உங்களிடம் பேசுவது உங்களுக்குப் பெருமைதானே! அப்படி என்னிடம் பேசுவதைக் கடந்து உங்களுக்கு வேறென்ன வேலை இருந்துவிடப் போகிறது.

என்ற அதிகாரத்தொனியும் தற்பெருமையும் மேலோங்கி இருக்கும். அதேசமயம் இந்த அதிகாரிக்கு வரும் அழைப்புகள் பெரும்பாலும், சார், வணக்கம்.

நலமா?‌பிசியா இருக்கிங்களா? ரெண்டுநிமிடம் பேசலாமா? மிகத் தன்மையாக, அவரின் அனுமதி பெற்ற பிறகேதான் பலரும் பேசத் தொடங்குவார்கள். அதுதானே நாகரீகமும்கூட? ஆனால் அதிகாரியோ அப்படியல்ல, “போன் போட்டதும் வழவழ கொழகொழ” தொனத்தொனவென பேசத் தொடங்கிவிடுவார்.

தொடங்குவது ஒருபக்கமிருக்க, முடிக்கத் தெரியாமல் பேசுகிறாரா? இல்லை முடிக்க மனமின்றித் தவிக்கிறாரா? எதிர்முனையிலிருப்பவர் எந்தச் சூழலில் இருப்பார் என்று கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காதவர்.

சிலர் கொஞ்சம் கடுப்பாக பட்டும் படாமல் எல்லாவற்றுக்கும் ஈல் மட்டுமே இட்டுக்கொண்டிருப்பார்கள். சிலசமயம் பேச்சுக்கிடையில் நிறுத்தி, சொன்னதை திரும்பவேறு‌கேட்பார். திடுமென எதிர்முனை தடுமாறினாலும் “அதான் இதானென்று” பலரும் சமாளித்து விடுவார்கள்.

அதேபோல இவருக்கு போன் வந்துவிட்டால் போதும் தட்டாமல் குளியலறையில் சோப்பிட்டக் கையோடும் எடுத்துப்பேசும் பழக்கத்துக்காரர்தான்.

அவருக்கு ஒன்றுமில்லை. மறுமுனையில் பேசுபவருக்குத்தான் மறுமணம் நடக்குமளவிற்கு குடும்பத்தில் ஊடல்கள் முளைவிட்டிருக்கும்.

இவரின் அலைபேசி எண்ணிலிருந்து தப்பித்தவறி போன் வந்தாலே எடுப்போமா வேண்டாமா? பலரும் முழி பிதுங்கியே நிற்பார்கள்.

பல நேரங்களில் பயந்து அலண்டவர்கள், அந்த நேரத்தை அவதானித்து செல்லை ‘சுட்ச்ஆப்’ செய்யும் குரூரமும் நடந்துவிட்டிருக்கிறது.

நாம் அழைக்கும்போது பிறர் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ ஒருதுளி நினைக்காத மனிதர் அவர்.

போன் எடுக்கவில்லையெனில் பொங்கித்தான் எழுவார்.

அவரின் சிறு பிள்ளைத்தனத்தைப் புரிந்துகொண்டு சிறிது நேரமாகி போன்செய்தால், இயல்பாகப் பேசமாட்டார்.

அவரது பேச்சில் இருவருக்குமான உரையாடல்கள் சிக்கிக்கொள்ளும் பழைய கேசட், டேப்ரிக்கார்டர் போலவும், இடையிடையே அறுந்துபோகும் ரீல் போலவும் இருக்கும். எத்தனை ‘சாரி’ சொன்னாலும் மசியாதவர்.

ஒருவழியாக அழைத்தவர்கள் நமக்குக் கிடைத்த மரியாதை இவ்வளவுதானோவென நினைத்து தானாகவே விலகிக்கொள்வார்கள்.

அவரோடு போனில் வழக்கமாக உரையாடும் ஒருவர், ஒருநாள் அவரின் மனைவியைக் கண்டார்.

என்ன மேடம், சார் போன் பண்றதே இல்லையே, பிஸியா இருக்காரா? என்று கேட்டார். இப்போதெல்லாம் தேவையின்றி யாரிடத்திலும் பேசுவதில்லையே என்றார் மனைவி.

சார், அப்படி பேசாமல் இருக்க மாட்டாரே? அவரின் மழலைப்பேச்சும் எங்களைப்பற்றியான நினைப்பும் இப்போது எங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது தம்பி. கணவர் ஆரோக்கியமாக இருக்கையில் உணர்வின்றி இருந்தார்.

குறித்த நேரத்தில் அவரை மருத்துவமனை சேர்த்ததால் உயிருக்கு ஒன்னும் மோசமில்லை.

இதுபோதும். என்றவரின் முகத்தில் புன்னகை இழையோடிருந்தது.

வீட்டில் ஓய்விலிருக்கிறாராம். தன் சுயத்தை உணர்ந்தவராய் பெற்றப் பிள்ளைகளிடமும் மனைவியிடமும் நிறைவாகப் பேசுகிறார்.

அக்கறை எடுத்துக்கொள்கிறார்.

அவருக்கென வரும் சொந்த அழைப்புகள் முற்றிலும் குறைந்து விட்டதாம்.‌அப்படியே வந்தாலும் அவரது அலுவலகத்தின் முக்கிய அழைப்புகள் யாவையும் அவரது மனைவியே எடுத்துப் பேசுவாராம். ஆறுமாதத்திற்கு முன்னால் வழக்கம்போல காதில் செல்லை வைத்து கழுத்தை சாய்த்தவாறு பேசிக்கொண்டிருந்தவருக்கு ரத்தவோட்டமின்றி ஒரு பக்கமாக மறத்துப்போயிருக்கிறது.

சிறிது நேரத்தில் உடல் ஒரு பக்கமாக செயலிழந்திருக்கிறது. (

ஸ்ட்ரோக்) பக்கவாத நோயால் உயர்சிகிச்சையெடுத்தவர் சில மாதம் கழித்து திரும்பியிருக்கிறார்.

தொடர்ந்து அலை பேசிக்கொண்டிருந்ததால் கதிர்வீச்சு அவரின் மூளை நரம்புகளை பாதிக்கச் செய்திருக்கிறது.

பார்வையும் மங்கியிருக்கிறது. பிறரிடத்தில் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவார்த்தை நம்மிடத்திலும் பேசிவிடமாட்டாரா, பிள்ளைகள் பயணத்திற்காவது டாட்டா காட்டிவிட‌மாட்டாரா‌என எத்தனைமுறை ஏங்கியிருக்கிறேன்.

நடமாடும் பிணமாகக்தான் நானும் பிள்ளைகளும் ஒவ்வொருநாளும் அவரோடு கழித்திருந்தோம்.

அலைபேசியில் வெகுநேரம் பேசக்கூடாதென மருத்துவர்கள் அவரை எச்சரித்திருக்கிறார்கள்.

வேறுவழியில்லை. இனி எங்களிடம் மட்டுமே பேசப்போகிறார் என்றவாறு மகிழ்ந்து போனார் அவரின் மனைவி.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.