காற்று மாசைக் கண்டித்து போராடிய எம்எல்ஏக்கள் நீக்கம்
6 Jan 2026, 3:29 pm
<p><strong>காற்று மாசைக் கண்டித்து போராடிய எம்எல்ஏக்கள் நீக்கம்</strong></p>
<p>நாட்டின் தலைநகரமான தில்லியில் காற்று மாசு மிக மோசமாக (ஏ.கியூ.ஐ - 400 க்கு மேல்) உள்ளது. சுவாசத் தொற்றுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஆனால் காற்று மாசைக் குறைக்க ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து தில்லி சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் “காற்று மாசு முகக்கவசங்களை” அணிந்து போராடினர். இத்தகைய சூழலில் போராட்டத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் 4 எம்எல்ஏக்களை (சஞ்சய் ஜா, சோம் தத், குல்தீப் குமார், ஜர்னைல் சிங்) தில்லி சபாநாயகர் (விஜேயந்தர் குப்தா) இடைநீக்கம் செய்துள்ளார்.</p>
