குப்பையை அகற்றக் கோரி எம்எல்ஏ தர்ணா
5 Jan 2026, 6:21 pm
<p><strong>குப்பையை அகற்றக் கோரி எம்எல்ஏ தர்ணா</strong></p>
<p>திருப்பூர், ஜன.5 - முத்தையன் கோவில் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்றும் வரை நகரப் போவதில்லை எனக் கூறி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கே.செல்வராஜ், திங்க ளன்று அப்பகுதியில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து நகராட்சி நிர் வாகம் உடனடியாகக் குப்பையை அப்புறப்படுத்தியது. திருப்பூர் தெற்கு தொகுதி 55 ஆவது வார்டில் உள்ள முத்தையன் கோவில் நகர் பகுதியில் அவ்வழியே சென்ற எம்எல்ஏ கே.செல்வராஜிடம் அப்பகுதி மக்கள் குப்பையை அப்புறப்படுத்த முறையிட்டனர். இதையடுத்து, குப்பை குவிந்திருந்த பகு தியை பார்வையிட்ட எம்எல்ஏ செல்வராஜ், அங்கேயே நாற்காலியில் அமர்ந்து, குப் பையை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி துணை ஆணையர் ஆர்.மகேஸ்வரி தலைமை யிலான அலுவலர்கள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். தொகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொறுப்பு எனக்கு உண்டு. நான் மேயர் மற்றும் நிர்வாகத்திற்கு எதிராகப் போராடவில்லை. யாருக்கும் எதிராக அரசி யல் செய்யவில்லை என்று கே.செல்வராஜ் எம்எல்ஏ கூறினார்.</p>
