கல்குறிச்சி பள்ளி வளர்ச்சிக்கு உதவிகளை செய்வோம்! கலந்துரையாடலில் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ அறிவிப்பு
9 Jul 2026, 9:32 pm
<p><strong>கல்குறிச்சி பள்ளி வளர்ச்சிக்கு உதவிகளை செய்வோம்! கலந்துரையாடலில் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ அறிவிப்பு</strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 9- குமரி மாவட்டம், கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப்பள்ளியில் சிபிஎம் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி கலந்து கொண்டு, பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ள இப்பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் சட்டமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர். அதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பி னர் ஆர். செல்லசுவாமி அவர்கள், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இயன்ற அளவு தேவையான உதவிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகக் கூறினார்.</p>
