தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் கொள்கைகளைக் கைவிடுக: ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ

11 Oct 2026, 10:23 pm
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் கொள்கைகளைக் கைவிடுக: ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் கொள்கைகளைக் கைவிடுக: ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ

திருச்சிராப்பள்ளி, அக்.11 -மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளைக் கைவிட வேண்டும் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி வலியுறுத்தினார். திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 10-வது மாநில மாநாடு மற்றும் பொது மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கிய பொது மாநாட்டில், பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் ப. வீரமணி தொடக்கவுரையும், பொதுச் செயலாளர் ஆ. அம்சராஜ் தீர்மானவிளக்கமும் அளித்தனர்.

‘விற்பனைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’

உழைப்பாளி மக்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை நிர்வகிக்க மட்டுமே ஆட்சியாளர்களுக்கு உரிமை உண்டே தவிர, விற்பனை செய்ய அதிகாரம் இல்லை எனக் கூறிய செல்ல

சுவாமி, 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் விமானங்கள் படிப்படியாக விற்கப்பட்டு, பிரதமருக்

காக ரூ.16,000 கோடியில் வாங்கப்பட்ட இரண்டு விமானங்களே மிச்சம் என்றார். விமானம், ரயில்வே தனியாருக்குக் கொடுக்கப்பட்டதால் பயணிகள் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கி 65 ஆண்டுகளில் ரூ.40 லட்சம் கோடியாக வளர்ந்த எல்.ஐ.சி.யின் பங்குகளையும் தனியாருக்கு விற்கத் தயங்கவில்லை எனவும் விமர்சித்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் ஓராண்டுப் போராட்டம், நீட் வினாத்தாள் கசிவில் மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்கக் கோரிய போராட்டங்கள்ஆகியவை மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான எழுச்சி எனச் சுட்டிக்காட்டிய அவர், தில்லியில் இடதுசாரித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்தார்.

ஸ்மார்ட் மீட்டர், அவுட்சோர்சிங்குக்கு எதிர்ப்பு

தவெக அரசின் தனியார்மயக் கொள்கையின் பகுதியாக வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், சுமார் ரூ.15,000 கொடுத்து வாங்கும் இந்த மீட்டர் எதிர்காலத்தில் டாடா, அதானியிடம் மின்சாரம் பெறும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்றார். ரீசார்ஜ் தீர்ந்தவுடன் மின்சாரம் துண்டிக்கப்படும் இத்திட்டத்தை சட்டமன்றத்தில் இடதுசாரிகள் எதிர்த்தும் சென்னையில் அமல்படுத்தத் தொடங்கியது சரியல்ல எனவும், செவிலியர் நியமனத்தில் 4,724 பணியிடங்களை எம்.ஆர்.பி. இல்லாத தொகுப்பூதிய அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றுவதையும், பேருந்து ஓட்டுநர்களை வெளிமாநிலங்களிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவருவதையும் கடுமையாகக் கண்டித்தார்.

நெடுஞ்சாலை ஆணையத்தைக் கலைக்க வேண்டும்

தமிழகத்தில் 76,858 கி.மீ. சாலைப் பணிகள் செய்யப்பட வேண்டிய நிலையில், 2024-இல் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு மாதிரி நெடுஞ்சாலைகள் ஆணையத்தை’ உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றார். ஜெயலலிதா ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்கள், தொடர் போராட்டத்தின் விளைவாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதையும், போராட்டக் காலத்தைப் பணிக்காலமாகச் சேர்க்க வேண்டும் என்ற உரிமையைச் சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றதையும் சுட்டிக்காட்டிய அவர், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றார். அனைத்துத் துறைகளிலும் தனியாரை அனுமதிக்கும்நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் எனவும், வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களின் உரிமைகளுக்காகத் தொடர்போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் வெ. சோமசுந்தரம் நிறைவுரையாற்ற, மாநிலப் பொருளாளர் இரா. தமிழ் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.