எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
16 Jul 2026, 9:17 pm

எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை, ஜூலை 16 - தமிழக சட்டமன்றத்தில், அதிமுக கொறடா அனுமதியின்றி தவெகவுக்கு ஆதரவளித்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எ ல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய 4 பேர் மீது, தகுதி நீக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப் பட்டிருந்தது.

ஆனால், தகுதிநீக்க கோரிக்கை நிலுவையில் இருக்கும் போதே, இவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, ஆளும் தவெக-வில் இணைந்தனர். சபாநாயகரும் இவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

இதையடுத்து, ராஜினாமா ஏற்புக்குத் தடை விதிக்க வேண்டும்; தீர்ப்பு வரும்வரை நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது; தகுதி நீக்க மனுமீது விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற த்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டி ருந்தது.

இந்த மனு, வியாழனன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, ராஜி னாமா செய்த இசக்கி சுப்பையா ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், ஜெய க்குமார், மரகதம் குமாரவேல், சத்தியபாமா தரப்பில் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதிகள் விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.