தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்! அமைச்சரிடம் இராசேந்திரன் எம்எல்ஏ மனு

8 Jun 2026, 9:55 pm
தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்! அமைச்சரிடம் இராசேந்திரன் எம்எல்ஏ மனு
<p><strong>தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்! அமைச்சரிடம் இராசேந்திரன் எம்எல்ஏ மனு</strong></p><p>தென்காசி, ஜூன் 8- தென்காசி மாவட்டத்தி ற்கு வருகை தந்த தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்ச ருமான வி.கே.இராஜீவை கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் நேரில் சந்தித்து, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனு அளித்தார். அந்த மனுவில், “தென் காசி மாவட்டம் கடைய நல்லூர் நகராட்சி மற்றும் கடையநல்லூர், செங்கோட் டை, தென்காசி ஒன்றியங் கள் உள்ளிட்ட மாவட்டத்தின் இதரப் பகுதிகளைச் சேர்த்து கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு நகராட்சி, 80 ஊராட்சிகள் உட்பட்ட 493 கிராமங்களுக் கும், தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வசதி செய்திட ரூ.640 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் உத்தர வுக்காக அனுப்பப்பட்டுள் ளது. இத்திட்டத்தை விரை ந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையநல்லூர் தொகுதி உட்பட தென்காசி மாவட் டத்தின் மேற்கு பகுதி முழு வதும் மேற்கு தொடர்ச்சி அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் காட்டுப் பன்றி கள் மற்றும் வன விலங்குக ளின் தொல்லையால் மலை யடிவார விவசாயம் முற்றி லும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயி விளைவிக்கிற பயிர்கள் வனவிலங்குக ளால் சேதப்படுத்தப்படு வதோடு விவசாயிகளின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படுகிற நிலை அன்றாட நிகழ்வாக உள்ளது. இதனால் விவசாயிக ளுக்கு நிரந்தரமான ஒரு இழப்பீடோ, தீர்வோ இல் லாத நிலை உள்ளது. இவற்று க்கு ஒரு நிரந்தர தீர்வு எட்ட வனத்துறை, வேளாண்மை துறை, வருவாய்த்துறை இணைந்த நிபுணர் குழு ஒன்றை அமைத்து நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக காட்டுப் பன்றிகளை வன விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்கி, அதற்கு ஒரு விடியலை உருவாக்கு வதற்கு ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். வழக்கறிஞர் இசக்கி சுப்பையா உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.