எருது விடும் திருவிழா எம்எல்ஏ நல்லதம்பி துவக்கி வைத்தார்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>எருது விடும் திருவிழா எம்எல்ஏ நல்லதம்பி துவக்கி வைத்தார்</strong></p>
<p> திருப்பத்தூர், பிப்.17- திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி ஊராட்சி மோட்டூர் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் வாடி வாசல் வழியாக காளை கள் ஓடின. இதில் வெற்றி பெற்ற காளை களின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள், ஃபேன், மிக்சி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கந்திலி ஒன்றியதிமுக செயலா ளர்கள் மோகன்ராஜ், குண சேகரன், ஊர் கவுண்டர்கள் சங்கர், அன்பழகன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், விழா குழு நிர்வாகிகள் இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
