தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் உளுந்தூர்பேட்டையில் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

9 Feb 2026, 3:02 pm
தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் உளுந்தூர்பேட்டையில் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
<p><strong>தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் உளுந்தூர்பேட்டையில் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, பிப்.9- &nbsp; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்க ளுக்கான உணவு வழங்கும் திட்டத் தொடக்க விழா திங்கள்கிழமை (பிப்.9) நடைபெற்றது. &nbsp;தமிழ்நாடு முதலமைச்சரால் தூய்மைப் பணியாளர்கள் (நிரந்தரம் மற்றும் தொகுப்பூதியம்) மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, உளுந்தூர் பேட்டை நகராட்சி நகர மன்றத் தலைவர் கே. திருநாவுக்கரசு தலைமையில் உணவு வழங்கும் திட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் எஸ்.கே. புஷ்ரா முன்னிலை வகித்தார். தூய்மைப்பணி ஆய்வாளர் மு. கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். திட்ட த்தினை உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் ஆ.ஜே. மணிக் கண்ணன் தொடங்கி வைத்துச் சிறப்புரை யாற்றியதோடு, அவர்களுடன் காலை உணவு அருந்தினார். இதில் முன்னாள் நகர மன்றத் தலைவர் க.ஜெய்சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.