தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைத்து ஊராட்சிகளிலும் எம்எல்ஏ நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எம்.சின்னதுரை எம்எல்ஏ பேச்சு

23 Feb 2026, 5:35 pm
அனைத்து ஊராட்சிகளிலும்  எம்எல்ஏ நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எம்.சின்னதுரை எம்எல்ஏ பேச்சு
<p><strong>அனைத்து ஊராட்சிகளிலும் &nbsp;எம்எல்ஏ நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எம்.சின்னதுரை எம்எல்ஏ பேச்சு</strong></p> <p>புதுக்கோட்டை, பிப்.23- &nbsp;சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி பாரபட்சமின்றி, தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசினார். &nbsp;கந்தர்வகோட்டை தொகுதியின் 5 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. &nbsp;இக்கூட்டத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசுகையில், &ldquo;புது க்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதி கந்தர்வகோட்டை. தொகுதியில் சிப்காட், கந்தர்வ கோட்டையை பேரூராட்சியாக தரம் உயர்த்தியது, மருத்து வமனை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளோம். தொகுதியில், ஒவ்வொரு ஊராட்சியிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குறைந்தது ஏதாவது ஒரு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. &nbsp; கடந்த அதிமுக அட்சியில் வேளாண் தொழிலை அழித்துவிட்டு சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்த திட்டத்தை எதிர்த்து போராடி கைவிடச் செய்தோம். அதேசமயம், தற்போது, 250 ஏக்கரில் வேளாண் தொழில் சார்ந்த தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வெற்றி பெற்ற 2 எம்எல்ஏகளும் தமிழக மக்களுக்காக சட்டப் பேரவையில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்திருந்தால் இன்னும் நிறைய கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம்&rsquo;&rsquo; என்றார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.