உரிமமின்றி பேருந்து ஓட்டிய எம்எல்ஏ : போக்குவரத்துத் துறை விசாரணை
6 Oct 2026, 12:41 am

உரிமமின்றி பேருந்து ஓட்டிய எம்எல்ஏ : போக்குவரத்துத் துறை விசாரணை

சென்னை, அக்.5 -வேலூரில் ‘வெற்றி பயணம்’ திட்டத் தொடக்க விழாவின்போது, தவெக எம்எல்ஏ தென்றல் குமார் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சுமார் 30 பயணிகளுடன் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் பேருந்து சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கினார். பின்பு, எம்எல்ஏ தென்றல்குமார் பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டினார். கியர் மாற்றுவது குறித்து ஓட்டுநரிடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்ளும் காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மோட்டார் வாகன விதிகளின்படி, பேட்ஜுடன் கூடிய கனரக வாகன உரிமம் உள்ளவர்களே பேருந்து போன்ற வாகனங்களை இயக்க முடியும்; இலகுரக வாகன உரிமம் உள்ளவர்கள் கார், வேன், டிராக்டர் ஆகியவற்றை மட்டுமே ஓட்டலாம். எம்எல்ஏவிடம் கனரக வாகன உரிமமும் பேட்ஜும் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.